சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir Neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகா, ஐஸ்வர்யா ஸ்கூலில் உள்ள குழந்தைகளுக்கு பரதம் சொல்லிக் கொடுப்பதற்காக ஏதேதோ காரணம் சொல்லி கிளம்புகிறாள். ஆனால் ஞானம் அவர்களை தடுக்க ஜனனி எப்படியோ வந்து அவர்களை சமாளித்து அழைத்து செல்கிறாள். பள்ளியில் ரேணுகா பிரமாதமாக குழந்தைகளுக்கு நடனம் சொல்லி தருவதை பார்த்த அனைவரும் அவளை பாராட்டுகிறார்கள். ரேணுகா பள்ளியின் ஆசிரியையாக நியமிக்கப்பட்டுள்ள விஷயத்தை சொன்னதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். 


 



 


கரிகாலனுக்கு வந்த சந்தேகம்:


சக்தி, ஜீவானந்தம் பற்றின தகவல்களை தெரிந்து கொள்வதற்காக ஊருக்கு செல்கிறான். குணசேகரன் பக்கவாதம் பற்றி கரிகாலனுக்கு ஒவ்வொன்றாக சந்தேகம் வருகிறது. அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குணசேகரனும் கதிரும் திருதிருவென முழிக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 


கரிகாலன் வழக்கம் போல வாய் துடுக்காக குணசேகரனிடம் பேசி கொண்டு இருக்கிறான். "இந்த வீட்ல என்னோட உலகம் உயிர் எல்லாமே கிடக்கு யா" என்கிறான் கரிகாலன். அதற்கு குணசேகரன் "அடுத்தவன் வீட்ல வந்து ஏன் இவ்வளவு ஐட்டங்கள வச்ச" என நக்கல் செய்கிறார் குணசேகரன். " நீர் விவரமா பேசுற மாதிரி பேசுறீரு ஆனா முட்டா பய மாதிரி கேள்வி கேக்குற" என குணசேகரனுக்கு சரியான மொக்கை கொடுக்க அவர் முகம் அப்படியே சுருங்கி போகிறது. 


 



ஜனனி சொல்ல வந்த சீக்ரெட் :


சமயலறையில் ரேணுகாவும், ஐஸ்வர்யாவும் பேசி கொண்டு இருக்கிறார்கள். நந்தினி அவர்களுக்கு பரிமாறி கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாக நந்தினியை அழைத்த ஜனனி "ஒரு விஷயம் சொல்லணும்" என சொல்கிறாள் நந்தினியும் அது என்ன என கேட்கும் போது கரடி மாதிரி கரிகாலன் "குட்டி அக்கா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என உள்ளே வர ஜனனி போய் மறைந்து கொள்கிறாள். வழக்கம் போல அசட்டுத்தனமாக ஏதாவது கேட்டு நந்தினியை கடுப்பேத்த போகிறான் கரிகாலன். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ.  


 



சக்தி சென்ற இடத்தில் ஜீவானந்தம் பற்றின தகவல் ஏதாவது தெரிந்ததா? அப்படி அவசரஅவசரமாக ஜனனி நந்தினியிடம் என்ன சொல்ல வந்தாள்? கரிகாலன் சந்தோஷமாக இருப்பதற்கு என்ன காரணம்? இன்றைய எதிர் நீச்சல் (Ethir Neechal) எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.