Maari Serial Today July 9: தாராவை தூக்கில் ஏற்றிய குழந்தை.. பதறிப்போன குடும்பம், அடுத்து என்ன? மாரி சீரியல் அப்டேட்! 

Maari Serial Today: மாரி “நீ இங்க வந்துட்ட.. உன் அக்கா ஒருத்தி இருக்கா, அவளும் இந்த வீட்டுக்கு வந்துட்டா, இந்தக் குழந்தை முழுமை அடைந்து விடும்” என்று ஃபீல் பண்ணி பேசுகிறாள்.

Continues below advertisement

Maari Serial Today Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா கழுத்தில் புடவை மாற்றி அவளை தூக்கில் ஏற்றிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது, தாரா தூக்கில் தொங்குவதைப் பார்த்து பதறிய குடும்பத்தினர், அதிர்ச்சி அடைந்து அவளை காப்பாற்றுகின்றனர், இதையடுத்து சூர்யா என்னாச்சி என்று கேட்க, தாரா ஒன்னும் இல்லை என்று சமாளித்து ரூமுக்குள் வந்து இந்தக் குழந்தையை கொல்லாமல் விட மாட்டேன் என்று சபதம் எடுக்கிறாள். 

இதையடுத்து மறுபக்கம் வெண்ணிலாவும் தேன்மொழியும் “தாரா எதுக்கு இந்த குழந்தையை கொல்லணும்.. சொத்து எதுவும் போகக் கூடாதுனு நினைக்கிறாங்க.. அவங்க செய்யுறது எதுவும் சரியில்ல.. சாமுண்டீஸ்வரி, காளீஸ்வரி அம்மா சொல்ற மாதிரி இந்த சொத்து எல்லாம் குழந்தைக்கு தான் போகணும்” என்று பேசிக் கொள்கின்றனர். 

மறுபக்கம் மாரி “நீ இங்க வந்துட்ட.. உன் அக்கா ஒருத்தி இருக்கா, அவளும் இந்த வீட்டுக்கு வந்துட்டா, இந்தக் குழந்தை முழுமை அடைந்து விடும்” என்று ஃபீல் பண்ணி பேசுகிறாள். அடுத்து குழந்தைக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறாள். 

இறுதியாக தத்தெடுக்கும் பங்க்ஷனுக்கு வந்த கிஃப்டுகளை பிரித்துப் பார்க்கும்போது அதில் ஒரு பொம்மை பரிசாக வந்திருப்பதை கவனிக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Siragadikka Aasai Serial July 9: யார் அந்தக் களவாணி? பிளேட்டை திருப்பி போட்டு எஸ்கேப்பாகும் விஜயா... சிறகடிக்க ஆசையில் இன்று

Dushara Vijayan : 35 வயதுக்கு மேல் சினிமாவில் இருக்கமாட்டேன்.. துஷாரா விஜயன் சொன்னது என்ன

Continues below advertisement