Siragadikka Aasai Written Update:சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


மீனா வீட்டுக்குள் நுழைந்த உடனேயே ”நல்லா சுத்திட்டு வந்துட்டியா?” என விஜயா கேட்கிறார். ”இவ என்னைக்கு இந்த வீட்ல காலடி எடுத்து வச்சாலோ அன்னைக்கே மரியாதை போச்சு, இவ புருஷனால மொத்தமா போச்சி” என விஜயா சொல்கிறார். ”முத்து பன்ன தப்புக்கு எதுக்கு மீனாவ திட்டுறிங்க” என்று ஸ்ருதி கேட்கிறார். ”இவ நல்ல பொண்டாட்டியா இருந்தா அவனை குடிக்காதிங்கனு சொல்லி மாத்தி இருக்கனும்” என்று விஜயா சொல்கிறார். ”அவன் போக்குல விட்டா தானே இவ நெனச்சதெல்லாம் பன்ன முடியும்” என்றும் சொல்கிறார். 


”முத்துவ மனோஜ் விஷயத்துல எதுவும் கேட்க வேண்டாம்னு சொல்ல சொன்னே. ஆனா அவரு கேட்டாரு. இப்போ இந்த விஷயத்துல நாங்களும் கேள்வி கேட்கலாம் இல்ல” என ரோகிணி மீனாவை பார்த்து சொல்கிறார். ”ஒரு நாளைக்கு 4 தடவை குடிக்குறான். குடும்ப மானம் போச்சே” என்று மனோஜ் சொல்கிறார். மீனாவை தொடர்ந்து விஜயா திட்டிக் கொண்டே இருக்கிறார். அதற்கு மீனா ”உங்களையும் குடிகாரன பெத்த அம்மானு தான் சொல்லுவாங்க” என்று மீனா சொல்கிறார்.


”அவரு பன்ன தப்புக்கு ஆளாளுக்கு என்னை திட்டுறிங்க. நீங்க தானே அத்தை பொறந்ததுல இருந்து அவரை வளர்த்து இருக்கிங்க” என்று மீனா கேட்கிறார். ”இவங்க அம்மா வளர்த்ததுனால தான் அவன் இப்டி ஆயிட்டான்” என்று விஜயா அண்ணாமலையை பார்த்து சொல்கிறார். ”முத்து பன்ன தப்புக்கு எதுக்கு மீனாவை திட்டுற” என்று அண்ணாமலை கேட்கிறார். ஸ்ருதியின் அம்மா விஜயாவுக்கு கால் பண்ணி ”நல்ல வேளை சம்மந்தி இப்டி ஒரு பையன் எங்களுக்கு இல்லை” என்று சொல்கிறார். 


”வேலை செய்யுற நேரத்திலேயும் குடிப்பியா நீ” என அண்ணாமலை முத்துவிடம் கேட்கிறார். ”அப்பா இல்லபா நான் எந்த தப்பும் பன்னல” என முத்து சொல்கிறார். பின் வீடியோ போட்டு காட்டியதற்காக மனோஜை அடிக்க கை ஓங்குகிறார் முத்து. உடனே அண்ணாமலை ”குடிச்சதும் இல்லாம ரவுடித்தனமா பன்ற” என முத்துவை அடிக்க கை ஓங்கி, கன்னத்தின் பக்கத்தில் சென்றதும் நிறுத்தி விடுகிறார். 


முத்து தான் குடிக்கவில்லை என்று எவ்வளவு சொல்லியும் அண்ணாமலை நம்பவில்லை. ”ரோகிணி இனிமே நீங்கலாம் எங்கள கேள்வியே கேட்க கூடாது” என்று முத்துவிடம் சொல்லி விட்டு செல்கிறார். முத்து மீனாவிடம் சென்று ”நீ கூட என்னை நம்ப மாட்ற இல்லை” என்று கேட்கிறார். ”குடிக்காம அந்த இடத்துட உங்களுக்கு என்ன வேலை” என்று மீனா கேட்கிறார். ”உங்களுக்கு என்ன கவலை எங்க வீட்லயும் இந்த வீட்லயும் அவமானப்பட போறது நான் தானே” என்று மீனா சொல்கிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது.