Siragadikka Aasai Written Update :சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


முத்துவை அரசியல்வாதி பாருக்கு மது அருந்த கூப்பிடுகின்றார்.  ஆனால் டியூட்டியில் இருக்கும் போது குடிக்க மாட்டேன் என்று முத்து சொல்கிறார். ஸ்ருதி ரவியை ”வீட்டுக்கு வா இப்போவே குழந்தை பெத்துக்கணும்” என்று கூப்பிடுகிறார். ”இப்போ நான் அந்த மைண்ட் செட்டுக்கு வந்துட்டேன் வா வீட்டுக்கும் போலாம்” என்கிறார். அதற்கு ரவி நமக்கு முன்னாடி ”மனோஜ் இருக்கான் முத்து இருக்கான் நாம கொஞ்சம் வெயிட் பண்ணலாம்” என ஸ்ருதி சொல்கிறார். 


குழந்தைங்கன்றது பெரிய கமிட்மெண்ட்  ”ஸ்ருதி நாம இப்போ தான் லஃப்போட ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்ல இருக்கோம்” என ரவி சொல்கிறார். ”அதான் நானும் சம்பாதிக்கிறேனே.. அப்புறம் என்ன என்று ஸ்ருதி கேட்கிறார். ரவியுடன் வேலை செய்பவர் ரவி உனக்கு குழந்தை இருக்கா?” என கேட்கிறார். இல்ல சார் அதை பத்தி தான் டிஸ்கஷன் பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்று சொல்கிறார். அதுக்குள்ள குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப போறமாதிரி பேசிக்கிட்டு இருக்கிங்க” என்று அவர் கேட்கிறார். அதற்கு ஸ்ருதி ”சீக்கிரமே குழந்தை பொறந்துடும் சார் அதுக்கு தான் இவனை கூப்ட வந்தேன் நீங்க ஒரு ஆஃப் டே மட்டும் இவனுக்கு லீவு கொடுங்க” என்று சொல்கிறார். 


அரசியல்வாதி நீண்ட நேரம் பாருக்குள் இருந்து வெளியே வராததால், முத்து பாருக்குள் செல்கிறார். அப்போது முத்துவுக்கு சைடிஷ் சாப்பிட கொடுக்கின்றனர். முத்து அதை சாப்பிடுகிறார். அப்போது சிட்டி முத்துவை வீடியோ எடுக்கிறார். பின் முத்துவை பின் தொடர்ந்து சென்று அவர் காரில் ஏறுவதையும் வீடியோ எடுக்கின்றனர். ”கார் ட்ரைவர் பட்டப்பகலில் குடிச்சிட்டு வண்டி ஓட்டுறான் இவன மாதிரி ஆளுங்க கார்ல ஏறாதிங்கனு வாய்ஸ் போட்டு மெசேஜ் தட்டி விடுங்க. அந்த கார் அவனை விட்டு போகணும். அந்த மீனாவுக்கு நான் யாருனு காட்டுறேன்” என சிட்டி சொல்கிறார். 


பொதுமக்கள் அந்த வீடியோவை பார்த்து விட்டு பொறுக்கி பையன் என்று திட்டுகின்றனர். சத்யா ஒரு புது ஃபோன் வைத்திருக்கிறார். அதன் விலை எவ்வளவு என்று மீனா கேட்கிறார். ”25 ஆயிரம் ஈ.எம்.ஐ கட்டி இருக்கேன்” என்று சத்யா சொல்கிறார். ”அவ்ளோ சம்பளம் குடுக்குறானா அவன் உனக்கு அதான் எங்களுக்கு சந்தேகமா இருக்கு” என்று மீனா சொல்கிறார். ”இவனால தான் இப்போ மாமாவும் வீட்டுக்கு வர்றது இல்ல” என்று சீதா சொல்கிறார். சத்யா முத்து குறித்து தவறாக பரவிக் கொண்டிருக்கும் வீடியோவை காண்பிக்கிறார். இதை பார்த்து மீனா அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.