'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியலில் முத்து மீனாவின் திருமண நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் போது சத்யா வீட்டுக்கு வருகிறான். அவனை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். முத்து எப்படி ரியாக்ட் செய்யப்போகிறான் என்பதை நினைத்து மீனாவும் அவளுடைய அம்மா மற்றும் தங்கை பயப்படுகிறார்கள். 



"அக்கா கல்யாண நாளுக்கு நான் எப்படி வராமல் இருப்பேன். எனக்கு இருக்கிறது ஒரு அக்கா. நான் இப்போது தான் சம்பாதிக்கிறேன். என்னுடைய அக்காவுக்கும் மாமாவுக்கும் ஏதாவது என்னுடைய சம்பளத்தில் இருந்து செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என சத்யா சொல்ல அண்ணாமலையும் அவரின் நண்பர் பரசுவும் சத்யாவை பாராட்டுகிறார்கள். 


 



முத்துவும் சத்யா வாங்கி வந்த சட்டையை போட்டுக்கொள்கிறான். முத்து நார்மலாக சத்யாவிடம் பேச அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சத்யாவுக்கு முத்து அப்படி நடந்து கொள்வது ஷாக்காக இருக்கிறது. அனைவரும் கிளம்ப முத்து சத்யாவிடம் சென்று "நீ இதை எதிர்பார்த்து இருக்க மாட்ட. பிரச்சினை வரணும் என எதிர்பார்த்து தான் இதை செய்த என எனக்கு தெரியும். மரியாதையா அந்த சிட்டி கிட்ட இருந்து வெளில வந்துடு இல்லாட்டி காலையும் சேர்த்து உடைக்க  வேண்டியதா இருக்கும்" என்கிறான். 


 


பாட்டி எல்லாருக்கும் திருஷ்டி பட்டு இருக்கும் என சுத்தி போடுகிறார். மீனாவும் முத்துவும் மாடியில் போய் தூங்குவதற்காக செல்ல பாட்டி அவர்களுக்கு மட்டும் ரூம் இல்லாதது பற்றி கேட்கிறார். மனோஜும், ரோகிணியும் எஸ்கேப்பாக முயற்சி செய்ய ஸ்ருதியும் ரவியும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். அவர்கள் எங்களுடைய ரூமில் படுத்துக் கொள்ளட்டும் என சொல்கிறார்கள். ஆனால் முத்துவும் மீனாவும் எந்த பிரச்சினையும் இல்லை என மாடிக்கு போகிறார்கள். ஸ்ருதி மீனாவுக்கு டென்ட் கொடுத்து அனுப்புகிறாள். 


 


மீனாவும் முத்துவும் சந்தோஷமாக பாட்டு பாடி என்ஜாய் செய்து கொண்டு இருக்கிறார்கள். பாட்டி அண்ணாமலையை அழைத்து முத்து மீனா மட்டும் இப்படி மாடியில் படுத்துகொள்வது சரியில்லை. அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய சொல்லி சொல்கிறார். அண்ணாமலை மாடியில் ரூம் ஒன்றை கட்டுவது குறித்து யோசனை சொல்ல பாட்டியும் அதை சீக்கிரமாக செய்ய சொல்கிறார். பணம் ஏதாவது தேவைப்பட்டால் தருகிறேன் என்றும் சொல்கிறார். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) எபிசோட் கதைக்களம்.