தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இது சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோட்டில் ஸ்ரீஜா குழந்தையை பார்ப்பதற்காக டூப்ளிகேட் ஸ்ரீஜா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது ஸ்ரீஜா நான் முன்ன மாதிரி கிடையாது இப்போது திருந்திட்டேன் என்று சொல்லி குழந்தையை பார்க்க வந்ததாக குழந்தையைக் கேட்டு வாங்கி அம்மாவை பாரு என கண்ணீருடன் கொஞ்சுகிறாள். இதைப் பார்த்த ஸ்ரீஜா குழந்தையை பார்க்க நீங்க எப்ப வேணா வீட்டுக்கு வரலாம் என்று சொல்கிறாள். 


இதை தொடர்ந்து மாரிக்கு தாரா தூக்கில் தொங்குவது போல விஷன் வர அதிர்ச்சி அடைந்து தாராவிடம் விஷயத்தை சொல்லி உஷாரா இருங்க என்று சொன்னதும் தாரா இவளுக்கு வந்தா அது அப்படியே பலிக்குமே என்று பயப்படுகிறாள். இதையடுத்து மார்க் ஆண்டனி தாராவுக்கு போன் போட்டு கேட்ட பணம் என்னாச்சு என்று கேட்க இப்போதைக்கு இவனை கொல்ல முடியாது அதனால அவன் கேட்கிற பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கலாம் என்று தாரா முடிவெடுக்கிறாள். 


சூர்யாவிடம் சென்று அரவிந்துக்காக ஒரு ப்ராப்பர்ட்டி வாங்க போவதாக சொல்லி இருவது லட்சம் ரூபாய் பணத்தை கேட்க இதை ஜெகதீசன் மறைந்திருந்து பார்த்து தாராவுக்கு எதுக்கு இவ்வளவு பணம்? ஏதோ தப்பா இருக்கே என்று சந்தேகப்படுகிறார். சூர்யா பணத்தை கொடுத்தது தாரா வீட்டில் இருந்து வெளியே கிளம்ப ஜெகதீசன் அவளை பின்தொடர்ந்து செல்கிறார். 


அதன் பின்னர் தாரா மற்றும் மார்க் ஆண்டனி ஒரு குடோனில் சந்திக்கின்றனர். மார்க் ஆண்டனி கேட்ட பணத்தை கொடுக்கும் தாரா மறந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி இனிமே உன்னால எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. தேவைப்படும்போது நான் உன்னை கூப்பிடுறேன் என்று சொல்கிறாள். 


கையில் துப்பாக்கி உடன் வந்து நடப்பதை அனைத்தையும் மறைந்திருந்து பார்த்த ஜெகதீஷ்க்கு மாரியும் குழந்தை காணாமல் போக தாரா செய்து விஷயங்கள்தான் காரணம் என வெட்ட வெளிச்சம் ஆகிறது. இதனால் ஜெகதீஷ் துப்பாக்கியை எடுத்து அவர்கள் எதிரில் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.