சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (மே 10) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. குணசேகரனிடம் ஈஸ்வரி விவாகரத்து கேட்டதை பார்த்து தர்ஷன் ஈஸ்வரியிடம் கேள்வி கேட்கிறான். "அந்த ஜீவானந்தனை நம்பி தர்ஷினியை அனுப்பிவிட்டுட்ட. இப்போ நீயும் அந்த ஆளோட போய் சேர போற அதுதானே" என அபத்தமாக பேச ஈஸ்வரி தர்ஷன் கன்னத்தில் ஓங்கி அறைகிறாள். தாரா கதிரிடம் வருத்தப்பட்டு பேசுகிறாள். "அம்மா ஒரு தடவ கோபப்பட்டு பேசினதுக்கே நீ பழைய மாதிரி ஆயிட்டியேபா" என கேட்க கதிர் ஷாக்காகிறான்.
ஞானம் துவங்கிய தொழில் ஆரம்பமே நாசமாக போனதை நினைத்து மருமகள்கள் அனைவரும் கவலையுடன் உட்கார்ந்து இருக்க விசாலாட்சி அம்மா வந்து அவர்களை அவமானப்படுத்தி பேசுகிறார். கரிகாலனை நம்பி ஏமாந்தது பற்றி நினைத்து ஞானம் அவமானத்தால் மனம் வேதனைப்பட்டு அழுகிறான். வீட்டுக்கு திரும்பியவர்களை விசாலாட்சி அம்மா அசிங்கப்படுத்தி பேசுகிறார். "முடிஞ்சா இருங்க இல்லாட்டி இங்கிருந்து கிளம்புங்க" என கேவலமாக பேசுகிறார். அதை பொறுக்க முடியாத ஈஸ்வரி விசாலாட்சி அம்மாவிடம் எகிறுகிறாள். தர்ஷனிடம் சொல்லி உடனே குணசேகரனை வீட்டுக்கு வர சொல்லி சொல்கிறாள்.