Siragadikka Aasai Written Update : 'சிறகடிக்க ஆசை' இன்றைய (ஜூன் 8) எபிசோடில் கிரிஷை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்து செல்கிறார்கள். ரோகிணியின் அம்மா நாங்களே பஸ் ஸ்டாண்ட் போய் கொள்கிறோம் என சொல்லியும் கேட்காமல் நானே உங்களை இறக்கி விடுகிறேன் என அழைத்து செல்கிறான் முத்து.


மீனா ரோகிணியிடம் "கிரிஷ் பாட்டி அவங்க பொண்ண பத்தி ஏதாவது சொன்னாங்களா? அவங்க பொண்ணை பத்தி கேட்டாலே ஏதாவது சொல்லி சமாளிக்கிறாங்க. அவங்களுக்கு ஏதோ பிரச்சினை என நினைக்குறேன்" என சொல்கிறாள் மீனா. அதை கேட்டு ரோகிணி முகமே மாறிவிடுகிறது.



அண்ணாமலை அவருடைய நண்பரின் மகள் திருமணத்துக்காக நண்பர்களுடன் சேர்த்து நெல்லூர் செல்வதாக சொல்லி கிளம்புகிறாள். முத்துவின் நண்பன் அவனுடைய அண்ணனின் திருமண அழைப்பிதழை கொண்டு வந்து கொடுக்கிறான். அப்போது முத்து ஃப்ரெண்ட்டிடம் உன்னுடைய அண்ணன் கல்யாணம் அன்னிக்கு நீ ஊருக்கு எங்கயாவது போயிடு. உங்க அண்ணன் ஓடிப்போயிட்டான்னா, அந்த பொண்ணை உன்னோட தலையில கட்டி வைச்சுடுவாங்க. உன்னோட வாழ்க்கையே காலி ஆயிடும். அனுபவத்துல சொல்றேன்" எங்க மனோஜை வைத்து நக்கலாக சொல்கிறான் முத்து.


அதை கேட்ட விஜயா சந்தோஷப்பட்டு ”அவன் பேசினதுல இருந்தே தெரியல. தலையெழுத்தேன்னு தான் இவ கூட வாழ்ந்துகிட்டு இருக்கான்" என மீனாவை குத்திக்காட்டி பேசி விஜயாவும் ரோகிணியும் சிரித்து கொள்கிறார்கள். இதனால் மீனா மிகவும் வருத்தமாக இருக்கிறாள். 


முத்து வந்து டிபன் கொடுக்க சொல்ல வீட்டில் எதுவும் இல்லை அதனால் டிபன் இல்லை என சொல்கிறாள். மனோஜ் மீட்டிங் போக வேண்டும் அதனால் சீர்கிராம் டிபனை எடுத்து வைக்க சொல்கிறான். அவனுக்கு ரோகிணிக்கும் கூட இதே பதிலை சொல்கிறாள் மீனா. டென்ஷனான விஜயா "இவ்வளவு நேரம் அப்போ என்ன பண்ணிக்கிட்டு இருந்த?" என கேட்க "நீங்க சொன்னதை பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன்" என்கிறாள். அதை கேட்ட முத்து "அவங்க அப்படி என்ன சொன்னாங்க?" என கேட்கிறான். மீனாவுக்கு என்ன ஆச்சு அவள் ஏன் இப்படி பேசுகிறாள் என குழப்பத்தில் இருக்கிறான் முத்து. 



மற்றவர்கள் வெளியில் சாப்பிட்டு கொள்கிறேன் என கிளம்ப முத்து மீனாவிடம் இப்படி இருக்க என்ன காரணம் என கேட்கிறான். முத்து ப்ரெண்டியிடம் பேசியதை பற்றி சொல்லி அவள் காயப்பட்டதை பற்றி சொல்கிறாள். "நான் விளையாட்டுக்காக தான் சொன்னேன். அதை வைச்சு நீ ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சுகிட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்" என முத்து கோபப்பட்டு வீட்டில் இருந்து கிளம்பி விடுகிறான். 


மீனாவின் அம்மா போன் செய்து உடம்பு எப்படி இருக்கிறது என விசாரிக்க அவரிடமும் ஒரு மாதிரியாக கடுப்பில் மீனா பேச மீனாவின் அம்மாவுக்கு சந்தேகம் வருகிறது. வீட்டில் ஏதோ பிரச்சினை என யூகிக்கிறார். "அக்கா கிட்ட அந்த ஆள் ஏதாவது பிரச்சனை பண்ணி இருப்பார். அவர் தலையில அக்காவை கல்யாணம் பண்ணி வச்சு அவ வாழ்க்கையையே கெடுத்துடீங்க" என சத்யா முத்துவை பற்றி சொல்கிறான். அதை கேட்டு மீனா அம்மாவின் முகமே மாறிவிடுகிறது. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.