✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Neeya Naana This week : அமானுஷ்ய கதைகள் சொல்லி பயமுறுத்தும் ஆச்சரிய மனிதர்கள்! அதை எதிர்க்கும் அறிவியல் மனிதர்கள்... நீயா நானாவில் இந்த வாரம்

Advertisement
லாவண்யா யுவராஜ்   |  07 Jun 2024 09:58 PM (IST)

Neeya Naana This week : விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் இந்த வாரம் (ஜூன் 9) என்ன தலைப்பில் விவாதம் நடைபெறப்போகிறது தெரியுமா?

நீயா நானா ஜூன் 9 ப்ரோமோ

NEXT PREV
விஜய் டிவியின் ஆல் டைம் ஃபேவரட் எவர்க்ரீன் நிகழ்ச்சியான 'நீயா நானா ' நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தாலும் அதற்கு இருக்கும் மவுசு இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. அது ஒரு விவாத நிகழ்ச்சி என்பதையும் கடந்து சிந்தனையை தூண்டும் வகையில் பல தரப்பட்ட மக்களின் கருத்துக்களை பரிமாற்றங்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 
 
சாதாரண மனிதர்கள் கலந்துகொள்ளும் இந்த விவாத நிகழ்ச்சியில் பல தரப்பட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாரம்பரியமான விஷயங்கள் மட்டுமின்றி புத்துலகத்திற்கு ஏற்ற நவநாகரிக மனிதர்களுக்கேற்ற சில விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. அன்று முதல் இன்று வரை என்றுமே இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
 
அவரை தவிர வேறு யாராலும் இந்த நிகழ்ச்சியை இத்தனை சிறப்பாக நடத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான். 
 
 
 
அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சிக்கான முன்னோட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் விவாதிக்கப்படும் தலைப்பு ஆச்சரிய மனிதர்களும்! அறிவியல் மனிதர்களும்! இந்த நிகழ்ச்சியில் பேய் இருக்கிறது என நம்பும் தரப்பினர் ஒரு பக்கமும் 'பேய்' நம்பிக்கை இல்லாத மனிதர்கள் மறு பக்கமும் இருந்து அவரவர்களின் விவாதங்களை முன்வைக்கிறார்கள். 
 
அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுக்க முடியாத விஷயங்கள்தான் மூட நம்பிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. பேய் நம்பிக்கை என்பது பல நூற்றாண்டு காலமாக இருந்து வரும் ஒன்றுதான். இந்த புத்துலகம் எத்தனை எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் என பல மடங்கு மேலோங்கி சென்றாலும் ஒரு சில மக்கள் மத்தியில் பேய் நம்பிக்கை என்பதும் ஆழ்மனதில் இருக்கவே செய்கிறது. அதை பற்றிய  விவாதம்தான் இந்த வாரம் நடைபெற இருக்கிறது.
 
 
 
 
ஒரு சிலர் தாங்கள் எதிர்கொண்ட அமானுஷ்ய பேய் கதைகளை பற்றி பேச மறுபக்கம் அது இல்லை என மறுத்து பேச உள்ளனர். இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சதிஷ் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். விவாதங்கள் நடைபெற்றாலும் மூடநம்பிக்கை என பேசிய ஒருவரை உட்கார வைத்து அவர் கையில் மணியை கொடுத்து அதில் பேயை இறக்குகிறார் ஒரு வல்லுநர்.
 
இது கோபிநாத் உட்பட அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 
இந்த வாரம் நீயா நானாவில் மிகவும் ஸ்வாரஸ்யமான பல அமானுஷ்ய  நிகழ்வுகளை  பற்றி தெரிந்து கொள்ள நிகழ்ச்சியை காணாதவறாதீர்கள். 
Published at: 07 Jun 2024 09:58 PM (IST)
Tags: Vijay television gopinath neeya naana this week neeya naana june 9 promo
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • தொலைக்காட்சி
  • Neeya Naana This week : அமானுஷ்ய கதைகள் சொல்லி பயமுறுத்தும் ஆச்சரிய மனிதர்கள்! அதை எதிர்க்கும் அறிவியல் மனிதர்கள்... நீயா நானாவில் இந்த வாரம்
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.