Siragadikka Aasai Today Episode : 'சிறகடிக்க ஆசை' இன்றைய சீரியலில் மீனா "நான் ஸ்ருதியிடம் சொல்லிவிட்டு தான் சென்றேன்" என சொல்ல ஸ்ருதியோ "என்னிடம் மீனா எதுவுமே சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் நான் ஏன் சொல்லவில்லை என பொய் சொல்ல போகிறேன்" என சொல்கிறாள். அதை கேட்டு அனைவருக்கும் குழப்பமாகவே இருக்கிறது. மீனா திரும்ப திரும்ப அதையே சொன்னதால் ஸ்ருதி என்ன நடந்து இருக்கும் என ஞாபகப்படுத்தி பார்க்கிறாள். அப்போது தான் அவளுக்கு புரிகிறது டப்பிங் பேச வர சொல்லி அவள் வேலை செய்யும் இடத்தில் இருந்து போன் வந்ததால் ப்ளூடூத் மூலம் 'அவருக்கு சரி ஓகே' என்று சொன்னதை மீனா தன்னிடம் சொன்னதாக நினைத்து கொண்டார் என்பதை அனைவரிடமும் சொல்லி சிரிக்கிறாள்.
அடுத்தநாள் மீனா அவளுடைய அம்மா வீட்டுக்கு போகிறாள். கோயில் கும்பாபிஷேகத்துக்காக பூ கட்ட சென்றது பற்றி சொல்கிறாள். அப்போது சத்யா வீட்டுக்கு வர மீனா அவனை கண்டிக்கிறான். "எதற்காக மாமா மேல கம்ப்ளைன்ட் குடுக்க போலீஸ் ஸ்டேஷன் போன?" என அதட்டுகிறாள். அதை கேட்டு மீனாவின் அம்மாவும் கூட சத்யாவை திட்டுகிறார். "அந்த சிட்டி சொல்லி தான் நீ இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்க. இப்ப கூட நீ நல்ல இருக்கணும்னு தான் மாமா உன்னை கண்டிக்கிறார். பெருசா ஏதாவது பிரச்சினையில் உன்னை அந்த சிட்டி மாட்டிவிட போகிறான். ஜாக்கிரதையா இரு" என சொல்லி சாத்யவை எச்சரித்து விட்டு கிளம்புகிறாள் மீனா.
சத்யா சிட்டியை சந்தித்து மீனா வீட்டுக்கு வந்த விஷயத்தை பற்றி சொல்லி "இனிமேல் என்னோட அக்கா வீடு விஷயத்தில் தலையிட போறது இல்லை. அவர் என்னை பத்தி எதையும் வீட்டுல சொல்லவே இல்லை. இனிமேல் நான் அவரை கண்டுக்குறதா இல்லை" என சொல்ல சிட்டி கடுப்பாகிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை கதைக்களம்.