Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்துப் பார்க்கலாம்.


”என் அப்பாவ அத்தனை பேர் முன்னாடி அடிச்சவங்க வீட்ல நான் எப்படி இருக்க முடியும்” என ஸ்ருதி விஜயாவிடம் கேட்கிறார். ”முத்து இருக்க வீட்டுக்கு நான் வரணுமான்னு ஸ்டார்ட்டிங்லயே யோசிச்சேன்” என்று சொல்லி விட்டு பை என சொல்லி விட்டு காலை கட் செய்கிறார்.


”என்னமோ இவ எனக்கு மாமியார் மாதிரி பேசிட்டு போனை வச்சிட்டா” என்கிறார் விஜயா. ”இப்பவே ஸ்ருதி உன் பேச்சை கேக்க மாட்றான்னு சொல்றியே, பணக்கார வீட்ல தனியே வளர்ந்த பொண்ணு அப்படித்தான் அடம்பிடிப்பா” என பார்வதி சொல்கிறார். 


”ஏற்கெனவே உன் புருஷன் முத்து கூட வெளியே போக ரெடியா இருந்தாருன்னு சொல்ற. அப்றம் நான் உன்னை பார்க்க வர மாதிரி நீ என்னை பார்க்க வர மாதிரி ஆயிடப்போகுது” என்கிறார் பார்வதி. ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும், ”நீயும் மாப்பிள்ளையும் இங்கயே இருக்கணும்” என்று சொல்கின்றனர். ”அந்த முத்து இருக்க வீட்டுக்கு இனி நீ போகவே கூடாது” என்று ஸ்ருதியின் அம்மா சொல்கிறார். அது என் இஷ்டம் என ஸ்ருதி சொல்கிறார். 


”கனடா வேலைக்கு எப்டியாவது பணத்தை ரெடி பண்ணிட்டா வேலை ஓ.கே ஆயிடும்” என மனோஜ் சொல்கிறார். ”ஆமா உங்க அப்பா ஃப்ளைட் ஏறினாரே அவரு இங்க வந்து” என மனோஜ் கேட்க வருகிறார். ”நீ வாயை மூடிக்கிட்டு இரு” என்கிறார் ரோகிணி. ரவிக்கு கொரியர் வருகிறது. ”ரவியை கூப்பிடுங்க” என அண்ணாமலை சொல்கிறார். ”அப்பா ரவி இன்னும் வரலப்பா” என முத்து சொல்கிறார். ”ஆமா இல்ல மறந்துட்டேன்” என அண்ணாமலை சொல்கிறார். இதைப் பார்த்து முத்து அதிர்ச்சி அடைகிறார். 


”மூணு மகன் மருமகள்னு சந்தோஷமா இருந்தோம் யாரு கண்ணு பட்டுச்சோ” என அண்ணாமலை சொல்கிறார். ரவி வந்துடுவான், வந்துடுவான் என அண்ணாமலை சொன்னதையே திருப்பி திருப்பி சொல்கிறார். ”நம்ம அந்த பங்ஷனுக்கு போய் இருக்கக் கூடாது இல்ல” என மீனா சொல்கிறார். ”இதை தான் நான் அப்போவே சொன்னேன்” என முத்து சொல்கிறார். ”நீ வேலைக்கு போகணும்னு என்ன அவசியம்? நீ டப்பிங் பேசிதான் இங்க குடும்பம் நடக்கணுமா?” என ஸ்ருதியின் அப்பா கேட்கிறார்.


”கல்யாணத்துக்கு அப்றம் தான் இந்த வேலையை விட்டா என்ன” என ஸ்ருதியின் அப்பா கேட்கிறார். ”என்னோட ஃப்ரீடம்ல நீங்க தலையிட வேண்டாம்” என்று ஸ்ருதி சொல்கிறார். முத்து ரெஸ்டாரண்டுக்கு சென்று ரவியைப் பார்த்து பேசுகிறார். ”என்ன வீட்டுக்கு வரமாட்டியா, உன் பொண்டாட்டி வீட்டுலேயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா? ”என முத்து கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.