சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 26) எபிசோடுக்கான ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தடைகள் அனைத்தையும் தாண்டி தர்ஷினியின் கல்யாணத்தை தடுத்து நிறுத்த மண்டபத்துக்கு வருகிறார்கள் ஈஸ்வரி, ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி. தர்ஷினியின் இந்த திருமணம் நடந்தால் அது ஆணாதிக்கத்துக்கு மகுடம் சூட்டுவது மாதிரிதான். அது நடக்கூடாது. தடுத்து நிறுத்த தான் போறோம். பெண்கள்தானே அவர்களை எதிர்த்து விடலாம் என்கிற அவரின் திமிர்த்தனத்தை அழிக்கத்தான் போறோம். நாங்கள் தோற்கடிக்க போவது ஒரு ஆதி குணசேகரனை இல்லை. இந்த உலகத்தில் இருக்கும் ஆயிரம் ஆதி குணசேகரனை என சவாலாக பேசும் ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். 




ரவுடிகள் அனைவரையும் எதிர்த்து மண்டபத்துக்குள் நுழைகிறார்கள் ஜனனி டீம். போலீசும் அந்த நேரத்தில் மண்டபத்துக்கு வந்து விடுகிறார்கள். ரவுடிகளை கைது செய்து உள்ளே சென்று குணசேகரனிடம் பேசினால் அவர் அப்படியே கதையை மாற்றி விடுகிறார். ராமசாமியையும் கீர்த்தியையும் மணமேடையில் உட்கார வைத்து அவர்களுக்குத்தான் திருமணம் என சொல்லி போலீசை நம்ப வைத்து விடுகிறார். போலீசும் அதை நம்பி வெளியேறுகிறார்கள். ஜனனியும் ஈஸ்வரியும் எவ்வளவு தடுத்தும் போலீஸ் குணசேகரன் சொல்வதைத்தான் நம்புகிறது. 



போலீஸ் சென்றதும் மீண்டும் தர்ஷினியையும் சித்தார்த்தையும் மணமேடையில் உட்கார வைக்கிறார் குணசேகரன். உள்ளே என்ன நடக்கிறது என தெரியாமல் தவிக்கும் பெண்கள் ஏணியை போட்டு மேலே ஏறி வந்து திருமணத்தை தடுக்கிறார்கள். இது வரையில் அமைதியாக இருந்த தர்ஷினி மாலையை கழட்டி போட்டுவிட்டு மேடையில் இருந்து இறங்கி கீழே இறங்கி வந்து விடுகிறாள். 



இதுவரையில் ஜெயித்து வந்த குணசேகரன் முதல்முறையாக பெண்களிடம் தோற்று போகிறார். ஆனால் அவர் செய்த தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் தர்ஷினிக்கு தெரிந்தும் அவள் ஏன் வாயே திறக்காமல் அமைதியாக இருக்கிறாள் என்பதுதான் குழப்பமாகவே இருக்கிறது.


அவள் மட்டும் கடத்தல் விஷயம், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயற்சித்தது என அனைத்தையும் சொன்னால் நிச்சயம் குணசேகரனுக்கு தண்டனை கிடைக்கும். இனி வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.