Siragadikka aasai September 4 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து சவாரியை அழைத்து சென்று கொண்டு இருக்கிறான். கஸ்டமர் கல்யாணத்துக்காக பெண் பார்க்க குழப்பத்துடன் சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு முத்து தன்னுடைய திருமண கதையை பற்றி சொல்லி அட்வைஸ் செய்கிறான். மீனாவை பற்றி முத்து சொல்லும் போது "சில நேரம் மகாலட்சுமியை போல இருப்பாள், சில நேரம் பத்திரகாளியை போல ஆடுவாள்" என கஸ்டமரிடம் பேசி கொண்டு வருகிறான்.
அப்போது எதிரில் பைக்கில் வந்த மீனா முத்துவின் கார் மீது மோத இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல வாக்குவாதம் செய்கிறார்கள். அவர்கள் இருவரும் ரோட்டிலேயே நின்று சண்டை போட்டு கொண்டு இருந்ததால் அங்கு ட்ராபிக் ஆகிறது என போலீஸ் வந்து என்ன பிரச்சினை என விசாரிக்கிறார். பைக் மீது காரை கொண்டு வந்து இடிச்சிட்டியா? என போலீஸ் முத்துவை திட்ட மீனா முத்துவுக்கு சப்போர்ட் பண்ணி பேச போலீசுக்கு குழப்பமாக இருக்கிறது. பின்னர் இருவரும் அவர்கள் கணவன் மனைவி என சொல்ல "உங்களுக்கு விளையாட வேற இடமே கிடைக்கடலையா?" என போலீஸ் திட்டிவிட்டு அங்கிருந்து உடனே கிளம்ப சொல்கிறார். "இது தான் நீங்க சொன்ன பேய் பொண்டாட்டியா?" என கஸ்டமர் சொல்ல அதை கேட்ட மீனா கோபித்து கொண்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.
ரோகிணி அவளுடைய அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். அங்கே இருந்த நர்ஸிடம் அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என விசாரிக்கிறாள். "இப்போ எல்லாம் நார்மலா தான் இருக்கிறது. இன்னும் ரிப்போர்ட் வரல. ஒன்னும் பயப்பட வேண்டாம். இவங்களுக்கு பரவாயில்லை உடனே நினைவு வந்துடுச்சு. இருந்தாலும் அவங்க கூட யாராவது இருக்கனும்" என்கிறார் நர்ஸ். அம்மாவை பார்த்து கொள்ள ஒரு ஆள் பற்றி ரோகிணி விசாரிக்க அந்த நர்ஸ் நானே வந்து பார்த்து கொள்கிறேன் என்கிறார்.
மனோஜ் ரோகிணிக்கு போன் செய்து எங்கே இருக்கிறாள் என விசாரிக்கிறான். ரோகிணியோ நான் வித்யாவுடன் தான் இருக்கிறேன் என சொல்ல அந்த நேரம் பார்த்து ஷோ ரூமுக்கு வந்து ரோகிணி பற்றி விசாரிக்கிறாள் வித்யா. மனோஜுக்கு சந்தேகம் வர வித்யா எதையோ சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறாள்.
மீனாவை சமாதானம் செய்வதற்காக முத்து கொசு வலை ஒன்றை ஆள் வைத்து வீட்டுக்கு அனுப்பிவைக்கிறான். வந்த அந்த நபரோ மூச்சு முன்னூறு தடவை மீனாவை முதலாளி அம்மா என சொல்ல கடுப்பாகிறாள் விஜயா. அந்த நேரத்தில் ஸ்ருதி வீட்டுக்கு வர மீனாவுடன் சண்டை போட்டது போலவே மெயின்டெய்ன் செய்கிறாள். விஜயாவும் அதை நம்பி மீனாவை ஸ்ருதியிடம் திட்டுகிறாள். விஜயா உள்ளே சென்றதும் சூப்பரா இருக்கு என ஸ்ருதி மீனாவிடம் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறாள்.
கொசு வலை போட சென்ற நபரிடம் மீனா என்ன சொன்னாள் என முத்து விசாரிக்கிறான். "அவங்க பெருசா எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. நான் ஒன்னும் முதலாளி அம்மா கிடையாது. பேய் ஆட்டம் ஆடுற பொண்ணுனு போய் சொல்லுங்க" என சொல்லி அனுப்பியதாக சொல்கிறார். அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவுக்கு வந்தது.