சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai ) இன்றைய (மே 31) எபிசோடில் மீனாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து டாக்டரை பார்த்து மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து வீட்டுக்கு அழைத்து செல்கிறான் முத்து. அப்போது ரோகிணியின் அம்மா அழுதுகொண்டே கிரிஷை ஆம்புலன்சில் அழைத்து வருவதை பார்த்து விடுகிறார்கள்.
கிரிஷிற்கு காயம்:
விசாரித்த போது கிரிஷ் ரோட்டில் விளையாடி கொண்டு இருக்கும் போது வண்டி ஒன்று அவனை இடித்து தள்ளிவிட்டு சென்றுவிட்டதாகவும் அதனால் அவனுடைய கண்களில் அடிபட்டு விட்டது பற்றியும் ரோகிணியின் அம்மா முத்து மீனாவிடம் சொல்கிறார். டாக்டர் கிரிஷ் ரிப்போர்ட்களை பார்த்து ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்கிறார். மீனாவும் முத்துவும் ஹாஸ்பிடலிலேயே இருக்கிறார்கள்.
ரோகிணிக்கு அவளுடைய அம்மா போன் செய்து நடந்த விஷயத்தை சொல்கிறார். பதறிப்போன ரோகிணி உடனே நான் கிளம்பி வருகிறேன் என சொல்கிறாள். ஆனால் ரோகிணியின் அம்மா முத்துவும் மீனாவும் அங்கே இருப்பதை பற்றி சொல்லி இப்போது வர வேண்டும் என சொல்லிவிடுகிறாள். ஆனால் பதட்டத்தில் இருந்த ரோகிணி உடனடியாக கிரிஷ் எப்படி இருக்கிறான் என பார்க்க வேண்டும் என்பதற்காக பிளான் போடுகிறாள். மனோஜை சமாளிப்பதற்காக பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடல், ஹோட்டல்களுக்கு எல்லாம் சென்று நம்முடைய ஷோரூமை விளம்பரம் செய்யலாம். அதற்கு அவர்களுக்கு காம்ப்ளிமென்ட்டாக கெட்டில்களை கொடுக்கலாம் என சமாளித்துவிட்டு கிரிஷ் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு விரைகிறாள்.
சமாளிக்கும் ரோகிணி:
அங்கே சென்று அவர்களின் ஷோரூம் பற்றி சொல்லி இலவசமாக கெட்டில்களை நானே அனைத்து வார்டுகளிலும் கொடுத்துவிடுகிறேன் என சொல்லி ஒவ்வொரு குழந்தைகள் வார்டுக்கும் சென்று கொடுக்கிறாள். அப்போது மீனா முத்து இருவரையும் நேரடியாக சந்தித்த ரோகிணி ஏதேதோ பொய் சொல்லி சமாளித்து விடுகிறாள். மீனாவையும் முத்துவையும் வீட்டுக்கு போக சொல்கிறாள் ரோகிணி. ஆனால் அவர்களோ கிரிஷ் டிஸ்சார்ஜ் பற்றி தெரிந்த பிறகு தான் கிளம்புவோம் என சொல்லி விடுகிறார்கள்.
முத்துவும் மீனாவும் கேன்டீன் சென்ற நேரமாக பார்த்து கிரிஷை சென்று பார்க்கிறாள் ரோகிணி. அவனை கூட பத்திரமாக பார்த்து கொள்ள முடியவில்லையா என அவளுடைய அம்மாவிடம் கோபித்து கொள்கிறாள். என்னால் என்னுடைய மகனை வைத்து பார்த்து கொள்ள முடியவில்லையே என வருத்தப்படுகிறாள் ரோகிணி. அவளுடைய அம்மா கூடிய விரைவில் கிரிஷ் பற்றி மனோஜ் வீட்டில் சொல்லி அவனை அழைத்து செல்ல சொல்லி சொல்கிறார்.
முகம் மாறும் ரோகிணி:
ரோகிணி கிளம்பும் போது மீண்டும் முத்துவும் மீனாவும் பார்த்து விடுகிறார்கள். துபாயில் இருக்கும் கிரிஷ் அத்தையை போன் செய்து வந்து அம்மாவையும் கிரிஷையும் பார்த்து கொள்ள சொல்ல வேண்டும் என முத்து சொல்ல அதை கேட்டு ரோகிணி முகம் மாறிவிடுகிறது. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai ) எபிசோட் கதைக்களம்.