Siragadikka Aasai serial June 28 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஜூன் 28 ) எபிசோடில் முதல் நாள் குடித்துவிட்டு வந்து வீட்டில் கலாட்டா செய்த முத்து அடுத்த நாள் காலையிலேயே எழுந்து சாமிக்கு பூஜை செய்வதை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.


 


"முத்து : ரூம் தானே பிரச்சினையா இருந்துது. இனி எனக்கு ரூம் எதுவும் வேண்டாம். இந்த ரூமை அவனேமன்ஜோ எடுத்துக்கட்டும், அந்த ரூமை ரவி எடுத்துக்கட்டும். நானும் மீனாவும் இருக்குற இடத்துல ஒரு ஓரமா இருந்துக்குறோம். நீ இதை நினச்சு கவலை படாத பா" என்கிறான்.


விஜயா : இப்போ தான் இந்த புத்தி வந்துதா? 


 


 



"ரோகிணி : நல்ல வேலை மீனா நான் கூட நீங்க சபதம் ஏதாவது போட போறீங்களோ என நினச்சேன். உங்களோட நகையை எல்லாம் முத்து வாங்கி தருவாரு என நீங்க போட்ட சபதமே இது வரைக்கும் நடக்கல. அது முடியவே இன்னும் மூணு நாலு வருஷம் ஆகும் போல" என்கிறாள் 


"மீனா : ஏன் என்னோட புருஷனால நடக்காதா. எங்க கிட்ட உழைப்பு இருக்கு. அதனால அவரால கட்டி காட்டமுடியும். 


ரோகிணி : இது ஒன்னும் பூ கற்ற மாதிரி ஈஸியான வேலைன்னு நினைசீங்களா? ரூம் கட்ட நிறைய சம்பாதிக்கணும்" என்கிறாள். 


"மீனா : அவங்க சொல்ற மாதிரி இதை சவாலாவே எடுத்துக்கோங்க மாமா. என்னோட புருஷன் சம்பாதிச்சு சொந்தமா மாடில ரூம் காட்டுவார். அதனால் நீங்க இனி யாரிடமும் கை நீட்டி கேட்க வேண்டாம். நிம்மதியா இருங்க" என அண்ணாமலையை பார்த்து சொல்கிறாள் மீனா. 
ஸ்ருதியும் ரவியும் மீனாவுக்கு வாழ்த்துக்களை சொல்கிறார்கள்.  மனோஜ் ஷோரூமில் இருக்க ரோகிணி அவனிடம் வந்து ஒரு பத்திரிகையை கொடுத்து என்னோட கிளைன்ட் பேமிலி வெட்டிங் ரிசார்ட்டில் நாளை நடக்கிறது. நமக்காக ஒரு ரூம் புக் பண்ணி கொடுத்து இருக்கிறார்கள். நாம இரண்டு பேரும் நாளைக்கு போயிட்டு வரலாமா? வீட்டில் ப்ரைவசியே இல்லை. ப்ளீஸ் மனோஜ் என கெஞ்சுகிறாள் ரோகிணி. 


முதலில் மறுத்த மனோஜ் பின்னர் ரோகிணி பேசியதை பார்த்து சரி என்கிறான். அப்போது மனோஜுக்கு ஒரு போன் கால் வருகிறது. ஒரு போன் செய்து சர்விஸ் அபார்ட்மெண்டுக்காக ஏராளமான ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி என பெரிய பெரிய பொருட்களாக ஆர்டர் செய்கிறார். உடனடியாக நாளைக்கே டெலிவரி செய்யவேண்டும் என்கிறார்.


 


 



"ரோகிணி : என்ன மனோஜ் இது இவ்வளவு பொருட்கள் ஆர்டர் பண்ணறாங்க. ஆனா நாளைக்கு நாம ரிசார்ட் போகணுமே? என்கிறாள். 


 


மனோஜ் : சரி ரோகிணி. இது ரொம்ப பெரிய ஆர்டர். 4 லட்சம் வரை சேல்ஸ் ஆகும். லாபம் மட்டுமே 1 லட்சம் வரும். அதனால் நீ மட்டும் கல்யாணத்துக்கு போயிட்டு வந்துடு" என்கிறான். ரோகிணியின் முகமே வாடி போகிறது.


 


முத்து மீனாவுக்கு போன் செய்து வாசலுக்கு வர சொல்கிறான். நீ பெரிய சபதம் எல்லா போட்டுட்ட அதை நிறைவேத்த வேணாமா என கார் டிக்கியை திறந்து காட்டுகிறான். உள்ளே செங்கல்கள் உள்ளன. செங்கல் சூளை வைத்து இருக்கும் ஒருவர் சவாரிக்கு வந்தார். பணத்துக்கு பதிலாக அவரிடம் இருந்து செங்கலை வாங்கி கொண்டேன். வீடு கட்ட இது ஆரம்பமாக இருக்கட்டும் என்கிறான்.


"விஜயா : இப்படி இரெண்டு இரண்டு செங்கல் எடுத்துட்டு வந்து எப்போ வீடு கற்றது. அடுக்கு 60 கல்யாணமே முடிஞ்சுடும்." என்றதும் மீனா சந்தோஷமாக சிரித்து கொள்கிறாள். 


இருவரும் மாடிக்கு எடுத்து கொண்டு போய் இருக்கும் செங்கலை வைத்து வீடு கட்டி சந்தோஷ படுகிறார்கள்.