Siragadikka Aasai Serial June 27:  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஜூன் 27) எபிசோடில் அப்பாவை நினைத்து மனவேதனையில் முத்து குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறான். அவன் பேசும் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள். 


"மனோஜ்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா... கொஞ்ச நாள் குடிக்காமல் இருந்த.. நாங்க தூங்க வேண்டாமா? எதுக்கு இப்படி சத்தம் போட்டு கிட்டு இருக்க?"


"முத்து: அப்பா இந்த வீட்டை கஷ்டப்பட்டு கட்டினார். ஆனா இப்போ அவரால ஒரு ரூம் கட்ட முடியல என சொல்லி வருத்தப்படும் போது மனசுக்கு சங்கடமாக இருக்குது. 


 



“நீ என்ன பார்த்து எப்படி வீட்டை ஆட்டையை போட பிளான் போடுறேன் என சொல்லுவ. வீட்டை சுருட்டிக்கணும் என நினைக்குறவன் எதுக்காக ஹால்லையும் மாடியிலையும் போய் படுத்துக்கணும். சின்னதிலே நான் வேண்டாத பையன் தானே. அதனால தான் என்னைப் பாட்டி வீட்ல தள்ளிவிட்டீங்க. உன்னால தான் அப்பா இப்போ கையேந்தி நிக்குறார். அவரோட பணத்தை சுருட்டிக்கிட்டு போனது நீ தானே? என்னால முடிஞ்ச உதவியை எல்லாருக்கும் செய்வேன். என்னைப் பார்த்து நீ எப்படிடா அப்படி சொல்லலாம்?" என மனோஜை அடிக்க கை ஓங்குகிறான் முத்து. அவனை சமாதானம் செய்து அழைத்து செல்கிறாள் மீனா.


“எனக்கு எங்க அப்பா தான் முக்கியம். அவர் இருக்குற வரைக்கும் தான் இந்த முத்துவும் மீனாவும் இந்த வீட்ல இருப்பாங்க. அவர் இல்லைனா இந்த வீடு இருக்குற திசை பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டேன். நான் என்னோட காரை வித்துட்டு வேணும்னா பணம் கொடுக்குறேன். எனக்கு அப்பா தான் முக்கியம். நீ கவலைப்படாத அப்பா" என சொல்கிறான் முத்து. அனைவரும் முத்து போதையில் உளறுகிறான் என நினைக்கிறார்கள். முத்து இப்படி பேசுவதை நினைத்து வருத்தப்படுகிறார் அண்ணாமலை.


அடுத்த நாள் காலை அனைவரும் சாமிக்கு மணி அடிக்கும் சத்தம் கேட்டு வெளியில் வருகிறார்கள். முத்து சாமிக்குக்கு பூஜை செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். 


"முத்து : அப்பா நீ சங்கடப்படுவதை பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு  ரூம் எல்லாம் வேண்டாம். நான் எப்போதும் போலவே இருந்துக்குறோம்" என்கிறான் முத்து. இது தான் இன்றைய 'சிறகடிக்க ஆசை' எபிசோடுக்கான ஹிண்ட்.