Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை இன்றைய (ஜூன் 1) எபிசோடில் கிரிஷ் அத்தையை உடனே வேலையை விட்டுட்டு இங்க வரச்சொல்லணும் என முத்து சொல்ல அவளையும் அறியாமல் டென்ஷனாகிறாள் ரோகிணி. அடுத்தவங்களை நாம எப்படி அதிகாரம் செய்ய முடியும் என சொல்லி சமாளித்து விடுகிறாள். “நீங்க வீட்டுக்குப் போங்க உங்களுக்கு வேலை இருக்கு இல்ல?” என மீனாவை வீட்டுக்குப் போக சொல்ல, “நாங்க தான் தினக்கூலி செய்றவங்க. இன்னிக்கு இல்லைனா நாளைக்கு பண்ணிக்கலாம். நீங்க பெரிய பிசினஸ் பண்றவங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்” என மீனா குத்திக்காட்டி பேச ரோகிணி முகம் மாறிவிடுகிறது.  


 




டாக்டர் க்ரிஷை வந்து செக் செய்துவிட்டு “நீங்கள் இப்போது டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம். இரண்டு நாட்களுக்குப் பிறகு செக் அப்புக்கு வரலாம்” என சொல்கிறார். முத்து சென்று பில் கட்டி வர, மீனா கிரிஷூக்கு ஊட்டி விடுகிறாள். அதற்குள் ரோகிணியின் அம்மா சென்று ரோகிணியிடம் தகவல் சொல்கிறாள். “ஊருக்குப் போக வேண்டாம் இரண்டு நாட்கள் ஹாஸ்பிடலிலேயே தங்குங்க” என ரோகிணி சொல்கிறாள். அவளுடைய அம்மாவும் சரி என சொன்னாலும், முத்துவும் மீனாவும் வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலில் தங்க வேண்டாம் எங்க வீட்டுக்கு வாங்க என அழைத்துச் செல்கிறார்கள். 


க்ரிஷ் நினைப்பாகவே இருக்கும் ரோகிணி மனோஜ் சாப்பிட அழைத்ததும் அவன் மீது எரிந்து விழுகிறாள். மீனா வீட்டில் இல்லாததால் அனைவருக்கும் விஜயாவே சமைத்து அனைவரையும் வீட்டுக்கு சாப்பிட வரவைத்துள்ளார். அந்த நேரத்தில் மீனாவும் முத்துவும் ரோகிணியின் அம்மாவையும் க்ரிஷையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை பார்த்து டென்ஷனான விஜயா பயங்கரமாக சத்தம் போட மனோஜ் சென்று விஜயாவிடம் “ரெண்டு நாள் தானே? அவங்க இங்க தங்கி கொள்ளட்டும். நான் ரோகிணியை தேடி அவங்க ஊருக்கு போன போது எனக்கு ஆறுதலா பேசுனாங்க” என அவருக்கு சப்போர்ட்டாக பேச விஜயாவுக்கும்  ரோகிணிக்கும் ஷாக்காக இருக்கிறது. 


 



அண்ணாமலை, ரவி ஸ்ருதி, மனோஜ் என அனைவருமே அவர்கள் இங்கே தங்கி கொள்ளட்டும் என சொல்கிறார்கள். இங்க இருப்பவர்களுக்கே இங்க ரூம் இல்லை என பெரிய பஞ்சாயத்து நடக்கிறது என விஜயா சொல்ல உடனே அவங்க எங்க ரூம்ல தங்கிக்கட்டும் என ரோகிணி சொல்லவும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மனோஜூக்கு சப்போர்ட் பண்ணாங்கன்னு சொன்னாங்க, அது தான் அவங்க இங்க இருக்கட்டும் என ரோகிணி சொல்லவும் முத்து சென்று கிரிஷை ரூமில் படுக்க வைக்கிறான். 


ரோகிணியின் அம்மாவிடம் விஜயா துருவித் துருவி கிரிஷ் அப்பா அம்மா பற்றி விசாரிக்கிறாள். ரோகிணியிடமே சென்று கிரிஷ் பிறப்பு பற்றி தப்பாக பேச ரோகிணி டென்ஷனாகிறாள். “நாளைக்கு அவங்க இங்க இருக்கக்கூடாது அதுக்கு நீ தான் ஏதாவது பிளான் போடணும்” என விஜயா ரோகிணியிடமே சொல்கிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) கதைக்களம்.