Maari Serial: போலீஸில் சிக்கிய வெண்ணிலா.. குழந்தையைக் கொல்ல முயற்சிக்கும் தாரா, அடுத்து என்ன? மாரி சீரியல் அப்டேட்! 

Maari Serial May 31: வாய் பேச முடியாத தங்கையுடன் தங்கி வரும் வெண்ணிலா, சித்தியிடம் அப்பா அம்மா வாங்கிய கடனுக்காக அடிமை போல் வேலை செய்து வருவதும், கடனை அடைக்கவே திருட்டு வேலை செய்வதும் தெரிய வருகிறது,

Continues below advertisement

Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் உணவு டெலிவரி பெண் வேடத்தில் வந்த வெண்ணிலா, ரவுடிகள் மயங்கியதும் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது, வெண்ணிலா உள்ளே தேட எதுவும் கிடைக்காத நிலையில் அங்கிருக்கும் குழந்தையைப் பார்க்கிறாள், அந்த நேரத்தில் ரவுடியின் போன் ரிங்காக, வெண்ணிலா போனை எடுக்க, தாரா “குழந்தை உங்க கிட்ட தானே இருக்கு, உஷாரா பாத்துக்கோங்க, அந்தக் குழந்தையை கொல்ல நான் வந்துட்டே இருக்கேன்” என்று சொல்ல நட்சத்திரா குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேறுகிறாள். 

சித்தி வீட்டில் வாய் பேச முடியாத தங்கையுடன் தங்கி வரும் வெண்ணிலா, சித்தியிடம் அப்பா அம்மா வாங்கிய கடனுக்காக அடிமை போல் வேலை செய்து வருவதும், அந்தக் கடனை அடைக்கவே திருட்டு வேலை செய்து வருவதும் தெரிய வருகிறது, மறுபக்கம் சூர்யா இன்ஸ்பெக்டருக்கு போனை போட்டு “எப்படியாவது சாயங்காலத்துக்குள்ள குழந்தையை கண்டு பிடித்து குடுங்க. இல்லனா மாரி தற்கொலை பண்ணிக்குவேன்னு கோயிலில் உட்கார்ந்து இருக்கா” என்ற விஷயத்தை சொல்கிறான். 

பிறகு வீட்டிற்கு வந்த வெண்ணிலா “எந்த வேலையா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க, என் தங்கச்சியை வேலை வாங்காதீங்க” என்று சித்தியிடம் கோபப்படுகிறாள், சித்தி “நகைக்கடை வெளியே நின்று கொள்ளையடி, அப்போ தான் நிறைய பணம் கிடைக்கும்” என்று சொல்கிறார், நட்சத்திராவும் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு வந்து கொடுக்கிறாள். மறுபக்கம் ரவுடிகள் இருக்கும் வீட்டிற்குள் தாரா நுழைய, ரவுடிகள் மயங்கிக் கிடப்பதையும், குழந்தை இல்லாததையும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். ரவுடிகளை எழுப்பி குழந்தை எங்கே என்று கேட்க, தெரியவில்லை என்று சொன்னதும் தாரா டென்ஷனாகிறாள்.

அடுத்து வெண்ணிலா வீட்டுக்கு வரும் போலீஸ், அந்தப் பணத்தை கொள்ளையடித்தது நீ தானு எங்களுக்கு தெரியும் என்று சொல்ல, சித்தி “எங்ககிட்ட பணம் இல்ல, நீங்க வேணா தேடி பாருங்க” என்று சொல்ல, போலீசும் வீட்டில் சோதனையிட எதுவும் கிடைக்காத நிலையில் “பணத்தை நீ திருடலைனு குழந்தை மேல சத்தியம் செய்” என்று சொல்ல, வெண்ணிலா சத்தியம் செய்ய முடியாமல் பணத்தை எடுத்துக் கொடுக்க, போலீஸ் அவளுக்கு வார்னிங் கொடுத்துவிட்டுச் செல்கிறது. 

மறுபக்கம் குழந்தை கிடைக்காத விரக்தியில் மாரி தீயில் இறங்கத் தயாராகுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Garudan Movie Review: நட்பு, பகை, விஸ்வாசம்.. மீண்டும் ஹீரோவாக ஜெயித்தாரா சூரி.. கருடன் விமர்சனம் இதோ!

Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்

Continues below advertisement