Siragadikka Aasai serial July 27 : ரொமான்ஸ் மூடுக்கு வந்த அண்ணாமலை விஜயா... வந்து புது ஆப்பு... சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai Today : அண்ணாமலையையும் விஜயாவையும் ஒன்று சேர்க்க வேண்டும் என பாட்டி போட்ட பிளான் என்ன? மனோஜுக்கு பீதியை வர வைக்கும் மர்ம லெட்டர். 

Continues below advertisement

Siragadikka Aasai serial July 27  :  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் பாட்டி தன்னுடைய திருமணம் பற்றி பேர பிள்ளைகளிடம் சொல்ல அவர்கள் பாட்டியை கிண்டல் செய்கிறார்கள். கணவன் மனைவி மூவரும் ஊட்டிக்கொள்வதை பார்த்து ஆசைப்பட்ட விஜயா அண்ணாமலைக்கு ஊட்டி விட ஆசைப்படுகிறாள். ஆனால் அண்ணாமலையோ அதை உதாசீனப்படுத்துவது போல எனக்கு போதும் என சொல்லி எழுந்து சென்று விடுகிறார். விஜயா மனசு சங்கடப்படுவதை அனைவரும் கவனிக்கிறார்கள். முத்துவிடம் அவர்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்து செல்ல சொல்கிறார் பாட்டி.

Continues below advertisement


 வீட்டில் பிரச்சினை அனைத்தும் முடிந்துவிட்டதால் புதுசாக வாங்க நினைத்த காரை பணம் கட்டி எடுத்து வருகிறேன் என சொல்கிறான் முத்து. 

"மீனா : அந்த காரை எடுத்து வந்ததும் அத்தையையும் மாமாவையும் அந்த காரிலேயே கோயிலுக்கு கூட்டிட்டு போகலாம்

முத்து : அதுவும் சரிதான். அப்போ நீயும் ரெடியா இரு மீனா" என சொல்லிவிட்டு செல்கிறான் முத்து.

மனோஜுக்கு மொட்டை கடுதாசி ஒன்று வருகிறது. அதில் உங்களை சுற்றி இருப்பவர்களால் பிரச்சினை வர போகுது என எச்சரித்துள்ளனர். அதை படித்ததும் டென்ஷனான மனோஜ் யாரால் பிரச்சினை வரப் போகிறது என நினைத்து குழம்பி போகிறான்.

அதை ரோகிணி படித்துவிட்டு இது யாரவது உன்னை பிராங் பண்ணறதுக்காக கூட அனுப்பி இருக்கலாம் என சமாதானம் செய்கிறாள் ஆனாலும் மனோஜ் பயத்தில் இருந்து மீளவில்லை. கடையில் வேலை செய்யும் இருவரை போய் என்னை பார்த்து தானே சிரிச்சீங்க? என்ன பேசுனீங்க என திரும்ப திரும்ப கேட்கிறான். அவனை அங்கிருந்து ரோகிணி அழைத்து செல்கிறாள். இதை எழுதியது யாராக இருக்க கூடும் என ரோகிணியும் வித்யாவும் பேசி கொள்கிறார்கள்.

 

முத்து புதிய காருடன் வீட்டுக்கு வர அனைவரையும் அழைத்து கொண்டு கீழே வர சொல்லி மீனாவுக்கு போன் செய்கிறான். அனைவரும் முத்து இரண்டாவது கார் வாங்கியதை பார்த்து சந்தோஷப்பட விஜயா மட்டும் பொறாமையில் பொங்குகிறாள். பாட்டி கையால் கார் சாவியை மீனாவிடம் கொடுக்க சொல்கிறான் முத்து. அது போல பல கார் வாங்கி பெரிய ஆளாக வரவேண்டும் என பாட்டி ஆசீர்வாதம் செய்கிறார். 

"பாட்டி : அப்பாவையும் அம்மாவையும் கோயிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்துடு

முத்து : நீயும் வா பாட்டி

பாட்டி : உனக்கு எதுவுமே புரியாதா. எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு நான் கொஞ்ச நேரம் படுத்து இருக்கேன். மீனா அவனுக்கு சொல்லி புரிய வை" என்கிறார்.

அண்ணாமலை முன் சீட்டில் உட்கார போக பாட்டி அவரை பின் சீட்டில் போய் உட்கார சொல்கிறார். அண்ணாமலை விஜயாவுக்கு நேரம் ஒடுக்கி கொடுப்பதற்காக தான் பாட்டி இப்படி செய்கிறார் என்பதை ஸ்ருதி புரிந்து கொண்டு ரவியிடம் சொல்கிறாள். 

முத்து காரை தாறுமாறாக ஒட்டி விஜயாவையும் அண்ணாமலையையும் ஒருவரையொருவர் இடித்திக்கொள்ளும் படி செய்கிறான். திரும்ப திரும்ப அப்படி செய்ததால் அண்ணாமலை விஜயாவை கையை பிடித்து கொள்ள சொல்கிறார். அதை பார்த்து முத்துவும் மீனாவும் சிரித்து கொள்கிறார்கள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.   
 

Continues below advertisement