Siragadikka Aasai serial July 19 : ஆணவத்தில் விஜயா செய்தது சரியா? சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai today : விஜயா மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை சொல்ல அதற்கு விஜயா என்ன செய்தாள் தெரியுமா? இன்றைய சிறகடிக்க ஆசையில்

Continues below advertisement

Siragadikka Aasai serial July 19 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயாவை எப்படி ரூமில் இருந்து வெளியே வர வைப்பது என மீனாவும் முத்துவும் பேசி கொண்டு இருக்கிறார்கள். பாட்டிகிட்ட சொல்லலாமா என மீனா கேட்க "அதெல்லாம் வேணாம் அப்படி சொல்லனும்னா நகை எப்படி மாறுச்சு என்ற கதையை சொல்லணும். அவங்க யார் சொன்ன கேப்பாங்கன்னு எனக்கு தெரியும்" என்கிறான்.   

Continues below advertisement

காலை விடிந்தும் கூட விஜயா வராததால் மனோஜும் ரோகிணியும் வந்து கதை தட்டுகிறார்கள். 

"மனோஜ் : இதுக்கெல்லாம் நீ தாண்டா காரணம். அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை நான் சும்மா விடமாட்டேன். அப்படி ஏதாவது நடந்தா உனக்கு தானே சந்தோஷம் அதனால் நீ எந்த முயற்சியும் எடுக்க மாட்ட" என முத்துவை பார்த்து சொல்ல மனோஜும் முத்துவும் கைகலப்பு ஏற்படுகிறது. மற்றவர்கள் தடுக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் அண்ணாமலை எதுவுமே கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். அதை  பார்த்து ஷாக்காகிறார்கள். 

 

 

அந்நேரத்தில் பார்வதி வீட்டுக்கு வந்து முத்து தான் போன் பண்ணி நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி வரச்சொன்னதாக சொல்கிறார். ரூம் கதவை தட்டி தட்டி பார்த்தும் விஜயா வெளியில் வரவில்லை. 

 

"பார்வதி : நீ வெளியே வரலைனாலும் பரவாயில்லை நானாவது உள்ளே வருகிறேன்" என சொன்னதும் விஜய கொஞ்சமாக கதவைத் திறந்து  பார்வதியை உள்ளே இழுத்து கொள்கிறாள்.

அனைவரும் விஜயா இன்னும் வெளியே வரவில்லையே என யோசித்துக் கொண்டே காத்திருக்க பார்வதி விஜயாவை வெளியே தள்ளி விடுகிறார்.

"பார்வதி : விஜயா பண்ணது தப்பு தான் அண்ணே. மனோஜ் மேலிருக்க பாசத்துல அவ அப்படி செஞ்சுட்டா. அவளை மன்னிச்சுருங்க.

அண்ணாமலை : என்கிட்டே எதுக்கு மா மன்னிப்பு கேட்கணும், யார் கிட்ட கேக்கணுமோ அவங்க கிட்ட கேக்க சொல்லு" என்கிறார். அதை கேட்டு விஜயாவுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. 

"விஜயா : ஒரு நாளுநான் இவ காலில் விழமாட்டேன். இப்போ உனக்கு குளு குளு என இருக்குமே. எல்லார் முன்னாடியும் என்ன அசிங்க படுத்தனும்னு தான் ஆசைப்பட்ட.

மீனா : நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல. நகையை மாத்துனது யாருனு கண்டுபிடிக்கும் என நினைச்சோம். அவ்வளவு தான்.

விஜயா தன்னுடைய கையில் இருந்த வளையல்களை தூக்கி மீனா மேல் விசிறி எரிந்து "காலணா பெறாத நகைக்கு இவ்வளவு பண்ணறியா. இந்த இதை பொறுக்கிட்டு போ" என சொல்லி கையில் போட்டிருந்த வளையல்களை தூக்கி மீனா மீது விசிறி இருக்கிறாள் விஜயா. அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். மீனா கண்கலங்கி நிற்கிறாள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட். 

Continues below advertisement
Sponsored Links by Taboola