Siragadikka Aasai serial July 17: பயத்தில் உதறும் மனோஜ்: வசமாக சிக்கியும் மழுப்பும் விஜயா: சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today :
Continues below advertisement

சிறகடிக்க ஆசை ஜூலை 17
Siragadikka Aasai Serial July 17 : மனோஜ் அவனாகவே உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் என முத்து செய்த காரியம். வசமாக வலையில் சிக்கிய விஜயா என்ன சொல்லி சமாளிக்கிறார். இன்றைய சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கிறது?
விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயாவும் மனோஜும் சாமியாரிடம் சென்று வாங்கி வந்த எலுமிச்சம்பழத்தை பூஜை ரூமில் கொண்டு வந்து வைக்கிறார்கள். அதை முத்து பார்த்துவிட்டு இதை யார் கொண்டு வந்து வைத்தது என கேட்கிறான்.
"விஜயா : நான் பார்வதியோட போகும் போது வழியில் ஒரு கோயிலுக்கு போனோம் அங்க தான் சாமி காலடியில் வைத்த பழம் ஒன்னு கொடுத்தாங்க. இதை வீட்ல வைச்ச நல்லது நடக்கும்ன்னு சொன்னாங்க" என்கிறாள்.
முத்துவும் மீனாவும் இதை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது "காலைல இவங்க இரெண்டு பேரும் இதுக்காக தான் போய் இருக்காங்க. அவனோட பயம் மூஞ்சியிலே தெரியுது. அதை வைச்சு ஒரு விளையாட்டு விளையாடி பார்க்கலாம்" என முத்து சொல்கிறான்.

அன்று இரவு மனோஜ் தூக்கம் வராமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான். அப்போது மனோஜ் ரூம் கதவை தட்டிவிட்டு முத்து சென்று ஒளிந்து கொள்கிறான். மனோஜ் வந்து திறந்து பார்த்து யாருமே இல்லை என உள்ளே சென்று விடுகிறான். மூன்றாவது முறையும் அதே போல நடக்க பயந்துபோன மனோஜ் ரூம் கதவை திறந்து வைத்து படுத்து கொள்கிறான். அப்போது முத்து எலுமிச்சம் பழத்தில் நூல் கட்டி மனோஜ் மீது எறிந்து பறக்கவிட்டு பயமுறுத்துகிறான்.
பயந்து போன மனோஜ் விஜயாவுக்கு போன் செய்து வரவைத்து பழம் பறந்து வந்தது பற்றி சொல்கிறான். இருவரும் பயத்தில் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது மனோஜ் முத்து கொண்டு வந்த எலுமிச்சம்பழத்தை தூக்கி போட்டுவிடலாம் என பிளான் செய்து பூஜை அறைக்கு சென்று அதை எடுக்கிறார்கள்.
"மனோஜ் : நாம வாங்கி வந்த பழத்தையும் சேர்த்து தூக்கி போட்டுவிடலாம்" என்கிறான்.
இருவரும் பழங்களை எடுத்து கொண்டு போய் மாடியில் இருந்து தூக்கிப்போட போக அனைவரும் ஹாலுக்கு வந்து விடுகிறார்கள். விஜயாவும் மனோஜும் இந்த நேரத்தில் பழத்துடன் என்ன செய்கிறார்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.
"விஜயா : கண்ட பழங்களை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் வீட்டுக்கு நல்லது இல்ல என பார்வதி சொன்னாள். அது தான் அதை தூக்கி போடலாம் என நினச்சேன்.
முத்து : நான் இதை மந்திரிச்சு எல்லாம் வைக்கவில்லை. அவனா மாட்டிக்கணும்ன்னு தான் நான் இப்படி யோசிச்சேன். அதனால தான் கடையில வாங்கி கொண்டு வந்து வைச்சேன்" என முத்து சொல்கிறான்.
அப்பவும் மனோஜை பதில் சொல்ல விடாமல் ரோகினி உள்ளே அழைத்து செல்ல உண்மையை சொல்லு நகையை என்ன பண்ண என முத்து அவர்கள் இருவரையும் வழிமறித்து கேட்கிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.