Siragadikka Aasai Serial July 16 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் முத்து கொண்டு வந்து வைத்த எலுமிச்சம் பழத்தை நினைத்து எங்கே அவனுடைய வாய் கோணிக்கப்போகுதோ என நினைத்து தூங்காமல் அவஸ்தை படுகிறான். ரோகிணியை எழுப்பி அதை கேட்க அவள் டென்ஷனாகி மனோஜை திட்டி படுக்க சொல்கிறாள்.
மனோஜ் பூஜை அறைக்கு சென்று அந்த எலுமிச்சம் பழத்தை எட்டி பார்க்கிறான். பின்னாலேயே வந்து விஜயாவும் பார்க்கிறாள். இருவரும் பயத்தில் புலம்பி கொண்டு இருக்கிறார்கள்.
"மனோஜ் : உண்மையை சொல்லிடலாமா? என்கிறான்
விஜயா : அதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம். இரு பார்வதிக்கு இது பத்தி எல்லாம் தெரியும். நான் அவகிட்ட போன் பண்ணி கேக்குறேன்" என்கிறாள்.
விஜயா பார்வதிக்கு போன் பண்ணி முத்து கொண்டு வந்த பழத்தை பற்றி சொல்ல அவரும் "இதெல்லாம் நிஜம் தான். எங்கு தெரிஞ்சவங்களுக்கு கூட இப்படி எல்லாம் நடந்து இருக்கு" என சொல்லி பயமுறுத்துகிறார்.
"பார்வதி : எனக்கு தெரிஞ்ச சாமியார் ஒருத்தர் இருக்கிறார். அவர் கிட்ட போய் கேட்டு பார்க்கலாம். நீ நாளைக்கு காலையில 7 மணிக்கு எல்லாம் வந்துடு" என்கிறார்.
அடுத்த நாள் காலை மனோஜும் விஜயாவும் சீக்கிரமாகவே எழுந்து ரெடியாக அதை பார்த்த அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். மனோஜ் டீலரை பார்க்க போகிறேன் என்றும் விஜயா பார்வதியை பார்க்க போகிறேன் என்றும் பொய் சொல்கிறார்கள். ஆனால் அவர்களை துருவி துருவி அனைவரும் கேள்வி கேட்கிறார்கள்.
விஜயா : பார்வதிக்கு உடம்பு சரியில்லை. அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும். மனோஜ் போகும் போது என்னை அவ வீட்ல இறக்கி விட்டுடுவான். சும்மா கேள்வி மேல கேள்வி கேட்காதீங்க. லேட் ஆகுது" என சொல்லி மனோஜை இழுத்து செல்கிறாள் விஜயா.
சாமியாரை போய் சந்தித்து உண்மையைச் சொல்கிறார்கள். அவரும் நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க. அப்போ வாய் கோணிக்க தானே செய்யும். நான் உங்களுக்கு ஒரு பழத்தை மந்திரிச்சு தரேன். அதை கொண்டு போய் அந்த பழத்துக்கு எதிர்ல வையுங்க என சொல்லி எலுமிச்சம் பழம் ஒன்றை கொடுக்கிறார்.
அந்த பழத்தை கொண்டு வந்து விஜயா வீட்டில் உள்ள பூஜை அறையில் பயந்துகொண்டே வைக்கிறாள். வைத்த அடுத்த நொடியே அது உருண்டு விழுகிறது. அதை பார்த்ததும் விஜயாவும் மனோஜும் ஷாக்காகிறார்கள். அடுத்த முறை விஜயா மனோஜை அனுப்பி இப்போ உருண்டு போன பழத்தை எடுத்து மேலே வைக்க சொல்கிறாள். மனோஜ் பயத்தில் என்னால் முடியாது என ஓடுகிறான். அவனை இழுத்து வந்து வைக்க சொல்கிறாள் விஜயா. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.