✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Siragadikka Aasai serial July 15 : மந்திரிச்ச எலுமிச்சம்பழம் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? சிறகடிக்க ஆசையில் இன்று

லாவண்யா யுவராஜ்   |  15 Jul 2024 03:53 PM (IST)

Siragadikka Aasai July 15 : முத்து சாமியாரிடம் இருந்து மந்திரிச்சு வாங்கி வந்த எலுமிச்சம் பழம் என போட்ட ஐடியா எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகப்போகிறது. இந்த பிளானில் விஜயாவும் மனோஜும் சிக்குவார்களா?

சிறகடிக்க ஆசை ஜூலை 15

 
விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி மனசு கஷ்டப்பட்டு ரவியிடமும் ஸ்ருதியிடமும் சொல்லி வருத்தப்படுகிறார். அவர்கள் இருவரும் அண்ணாமலைக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.
 
விஜயா அண்ணாமலையிடம் விசாரித்துகொண்டு இருக்க அந்த சமயத்தில் முத்து நெற்றியில் பட்டை அடித்து கொண்டு கத்திகொண்டே வீட்டுக்குள் வருகிறான். அவன் அப்படி செய்ததது பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கையில் பூசாரி மந்திரித்து கொடுத்தது போல எலுமிச்சை பழம் ஒன்றை காட்டுகிறான் முத்து.
 
"முத்து : வீட்டில் தங்க நகை கவரிங் நகையாக மாறியது பற்றி சாமியாரிடம் சொன்னேன்.  அவர் நகையை எடுத்தவன் இந்த ஏரியாவுக்குள் தான் இருக்கிறான். உங்கள் வீட்டில் கூட இருக்கலாம். இன்னும் 24 மணி நேரத்துக்குள் நகையை எடுத்தது யார் என்ற உண்மை தெரிந்துவிடும். அவர்களுடைய வாய் கோணிக்கும்" என பயமுறுத்துகிறான். இதை கேட்டு அனைவரும் ஷாக்காகிறார்கள்.  
 
 
 
மீனா முத்துவிடம் அது எந்த சாமியார் என விசாரிக்க முத்து மீனாவிடம் உண்மையை சொல்கிறான். மனோஜும் விஜயாவும் நகையை மாற்றி வைத்ததால் அவர்களாகவே பயந்து இருவரின் வாயும் கோணிக்கொண்டது போல நினைத்து பயப்படுகிறார்கள். ரோகினி தான் வந்து அவர்களை சமாதானம் செய்து வைக்கிறாள்.
 
"ரோகினி : முத்து சொல்றதை எல்லாம் நம்பாத. அவனாவது கோயிலுக்கு போவதாவது. சும்மா உங்களை மிரட்டி பாக்குறான். நீங்களாக போய் மாட்டிக்குகப்போறீங்க. பயப்படாம இரு" என மனோஜை சமாதானம் செய்து வைக்கிறாள்.
 
ஸ்ருதியும் ரவியும் அந்த எலுமிச்சை பழம் பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக வந்த மீனாவை அழைத்து சாமியார் பற்றி விசாரிக்க மீனா ரவியிடமும் ஸ்ருதியிடமும் உண்மையை சொல்கிறாள்.
 
"ஸ்ருதி : இந்த ஐடியா நல்லா இருக்கே. ஒருவேளை மனோஜ் நகையை எடுத்து இருந்தா அவரே மாட்டிப்பார்.
 
ரவி : அப்படி அவன் எடுக்கலைனா?
 
மீனா : உங்க அண்ணன் எடுத்து இருப்பார் என அவர் தான் சந்தேகப்படுகிறார். என்ன நடக்குது என பார்க்கலாம் " என்கிறாள்.
 
மனோஜ் தூக்கம் வராமல் இதை பற்றியே நினைத்து கொண்டு இருக்கிறான். சாமி அறையில் போய் பழத்தை பார்த்து பயப்படுகிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம். மனோஜும் விஜயாவும் என்ன பிளான் பண்ண போகிறார்கள். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க போகிறார்களா அல்லது மாட்டிக்கொள்ள போகிறார்களா என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
 
Published at: 15 Jul 2024 03:52 PM (IST)
Tags: Siragadikka Aasai serial siragadikka aasai today episode Siragadikka Aasai July 15 episode
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • Siragadikka Aasai serial July 15 : மந்திரிச்ச எலுமிச்சம்பழம் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? சிறகடிக்க ஆசையில் இன்று
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.