Siragadikka Aasai serial July 13: மாட்டிக்கிட்டான் மனோஜ்! ரோகினிக்கு உண்மை தெரிஞ்சுருச்சு! சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai Today :விஜயா மனோஜை அடித்தது அவனை காப்பாற்றுவதற்காக தான் என்ற உண்மையை தெரிந்து கொண்ட முத்து புதிதாக போட்டு இருக்கும் பிளான் என்ன?

Continues below advertisement

Siragadikka Aasai Serial July 13 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பணத்தை ஏமாந்ததை வைத்து விஜயா மனோஜை பயங்கரமாக அடித்து திட்டுகிறாள். ரோகினி மனோஜுக்கு ஆதரவாக பேசுகிறாள். 

Continues below advertisement

 

"ரோகினி : அவர் தான் பணத்தை ஏமாந்து இருக்கார். யாரையும் ஏமாத்தலையே? முத்து என்னவோ அவர் பணத்தை தொலைச்ச மாதிரி கத்திக்கிட்டு இருக்காரு?

 

 

அண்ணாமலை : விடு விஜயா. நீ டென்ஷன் ஆகாத. உன்னோட உடம்புக்கு ஏதாவது ஆக போகுது. இதே மாதிரி சின்னதிலிருந்தே அடிச்சு வளர்த்து இருக்கணும்.  

 

விஜயா : இவனால எனக்கு ஏதாவது ஆகி இருந்தா கூட பரவாயில்லை" என கோபப்படுகிறாள் விஜயா. 

 

ரோகினி மனோஜை ரூம் உள்ளே அழைத்து சென்று திட்டுகிறாள். அப்போது மனோஜ் விஜயாவுக்கு இந்த உண்மை தெரியும் என்ற உண்மையை ரோகினியிடம் சொல்கிறான். எதுவும் புரியாத ரோகினி இது ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை என கேட்கிறாள். மனோஜ் ரோகிணியிடம் மீனா நகையை கவரிங் நகையாக மாற்றியது பற்றிய உண்மையை சொல்கிறான். அதை கேட்டு ரோகினி பயங்கரமாக டென்ஷனாகிறாள். முத்துவுக்கு இந்த உண்மை தெரிந்தால் அவ்வளவு தான் என ரோகினி பயப்படுகிறாள். அவளுக்கு இந்த உண்மை தெரியும் என்பதை விஜயாவிடம் சொல்ல கூடாது என மனோஜிடம் சொல்லி விடுகிறாள். 


ரவியும் ஸ்ருதியும் மனோஜ் மீது சந்தேகப்படுகிறார்கள். ஆனால் ரவியோ எது எப்படி வேணாலும் இருக்கட்டும். நாம இதில் தலையிட வேண்டாம். அமைதியாக இருந்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் என்கிறான் ரவி.

 

"மீனா : உங்க அண்ணன் இந்த பணத்தை எடுத்து இருக்க மாட்டார் என தோணுது. இத்தனை நாள் அவருக்கு சப்போர்ட் பண்ண உங்க அம்மாவே உங்க அண்ணனை அடிச்சாங்களா.

 

முத்து : நீ யார் எது சொன்னாலும் நம்பிடுவியா? அம்மா மனோஜை அடிச்சதே அவனை காப்பாத்துவதற்கு தான் என எனக்கு தோணுது. அவனோட பிரெண்ட் கிட்ட விசாரிச்சு பார்த்த உண்மை என்னன்னு தெரிஞ்சுடும்" என்கிறான். 

 

அடுத்த நாள் முத்து மனோஜ் பிரெண்டை பார்க்கில் போய் பார்த்து நாசுக்காக விசாரிக்கிறான். "மனோஜ் உங்ககிட்ட 4 லட்சம் கடன் வாங்கினானா?" என கேட்க அவனோ "4 லட்சம் இருந்தா நான் ஏன் இங்க வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். அவனோட லிமிட் 30 ஆயிரம் தான். நாலு மாசத்துக்கு முன்னாடி 20 ஆயிரம் கொடுத்துட்டு நான் அவன் கிட்ட படாத பாடு பட்டேன்" என்கிறான். அதை கேட்டு முத்துவுக்கு மனோஜ் மேல் இருந்த சந்தேகம் கன்ஃபார்ம் ஆகிவிடுகிறது.

 

மீனாவை போய் பார்த்து இந்த விஷயத்தை சொல்கிறான். மீனா சாமியாரை போய் பார்த்து வெத்தலையில் மை தடவி பார்க்கலாம் என சொல்கிறாள். அதெல்லாம் வேணாம் நான் ஒரு ஐடியா செய்கிறேன் என ஒரு கடையில் போய் எலுமிச்சை பழம், மஞ்சள் குங்குமம், கயிறு எல்லாம் வாங்கி சாமியார் மந்திரிச்சு கொடுத்தது போல பாவ்லா செய்ய பிளான் போடுகிறான்.

 

வீட்டில் நடக்கும் விஷயங்களை நினைத்து அண்ணாமலை கவலையுடன் உட்கார்ந்து இருக்க அப்போது வீட்டுக்கு வந்த ரவியும் ஸ்ருதியும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola