Maari Serial: சொத்தை மாற்றி எழுதத் தொடங்கிய பேச்சு.. தாரா கொடுத்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்! 

Maari Serial Today July 12: டூப்ளிகேட் ஸ்ரீஜா மாரிக்கு போன் போட்டு குழந்தை தத்தெடுக்கும் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துப் பேசுகிறாள்.

Continues below advertisement

Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெண்ணிலாவுக்கு ஜெகதீஷ் எழுதி கொடுத்த விஷயங்களால் சந்தேகம் வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது டூப்ளிகேட் ஸ்ரீஜா மாரிக்கு போன் போட்டு குழந்தை தத்தெடுக்கும் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்து பேச மாரி எப்ப வேணாலும் வீட்டிற்கு வாங்க என்று சொல்லி போனை வைக்கிறாள். அடுத்து குழப்பத்தில் இருக்கும் வெண்ணிலா நடந்த விஷயத்தை சூர்யாவிடம் சொல்ல வந்து பிறகு ஏதாவது பிரச்னையாகிட போகுது என்று நினைத்து சொல்லாமல் வந்து விடுகிறாள். 

அதைத் தொடர்ந்து தாரா வீட்டில் குழந்தை குறித்து பேச்சு எழ சாமுண்டீஸ்வரி சொன்ன மாதிரி மாரி சூர்யா குழந்தை மீது சொத்தை எழுதி வைத்து விடலாம் என்று பேசிக்கொள்ள, தாரா “அது மாரி சூர்யாவுக்கு பிறந்த குழந்தை கிடையாது. அதனால் சொத்தை எழுதி வைக்க சம்மதிக்க மாட்டேன்” என்று எதிர்ப்பு தெரிவிக்கிறாள். 

“சாமுண்டீஸ்வரி என்ன சொன்னாங்க? சூர்யா மாரி குழந்தை மேல தான் சொத்தை எழுதி வைக்கணும்னு சொன்னாங்க.. இது ஒன்னும் சூர்யா மாரி குழந்தை இல்லையே.. சாஸ்திரியோட குழந்தை தானே, அதுவும் இல்லாமல் இந்த குழந்தை யாருக்கு பிறந்ததுனு கூட தெரியாது, அதனால் இந்த முடிவுக்கு நான் சம்மதம் சொல்ல மாட்டேன்” என்று ஷாக் கொடுக்கிறாள்.  இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ

Indian 2 Day 1 Box Office: பாக்ஸ் ஆஃபிஸில் மிரட்டும் இந்தியன் 2! முதல் நாள் முடிவதற்குள் இத்தனை கோடிகள் வசூலா!

Continues below advertisement
Sponsored Links by Taboola