இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையை இந்தியன் படத்தில் மிஸ் செய்தாலும் ஜூலை 26ம் தேதி வெளியாக இருக்கும் தனுஷின் 'ராயன்' படத்தின் மூலம் அந்த ஏக்கங்களை தீர்த்து கொள்ளலாம் என காத்திருக்கிறார்கள்.


தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட் சினிமாவுக்கும் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்வாரஸ்யமான பிளாஷ் பேக் ஸ்டோரி ஒன்றை சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். 



 


2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் போது பாப்  உலகின் அரசன் மைக்கேல் ஜாக்சனை நேரில் சந்திக்க வேண்டுமென ஆசைப்பட்டு ஏஜென்ட் ஒருவரை அணுகினேன். அது சம்பந்தமாக மெயில் அனுப்புவதாக தெரிவித்து இருந்தார். ஆனால் பதில் எதுவும் வராததால் அதை அப்படியே விட்டுவிட்டேன். 


பிறகு தான் ஆஸ்கர் விருதுக்கு என்னை நாமினேட் செய்துள்ளது குறித்த மெயில் வந்தது. அப்போது தான் மைக்கேல் ஜாக்சன் ஆபீசில் இருந்து அவரை சந்திப்பதற்கான அழைப்பு வந்தது. ஆனால் அப்போது நான் முடியாது என மறுத்துவிட்டேன். ஆஸ்கர் விருதை வென்றால் வந்து சந்திக்கிறேன் என கூறிவிட்டேன். 


ஆஸ்கர் விருதுகள் என் கையில் வந்ததும் அடுத்த நாளே நான் மைக்கேல் ஜாக்சனை நேரில் சென்று அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்.  அவருடைய குடும்பம் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்தார். அவருடன் நீண்ட நேரம் இசை பற்றி பேசி கொண்டு இருந்தேன். அப்போது அவருடன் இணைந்து பணிபுரிய விருப்படுவதை குறித்து சொன்னதும் நிச்சயம் செய்யலாம் என்றார்.






சென்னைக்கு வந்ததும் நான் மைக்கேல் ஜாக்சனை சந்தித்தது பற்றியும் அவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்தது குறித்தும் இயக்குநர் ஷங்கரிடம் கூறினேன். உடனே ஷங்கர் ரஜினிகாந்தின் 'எந்திரன்'படத்தில் அவரை பாட வைக்க முடியுமா? என கேட்டார்.


எந்திரன் படத்தில் அவரை பட வைப்பது குறித்து அவரை தொடர்பு கொண்டு பேசலாம் என நினைப்பதற்கு முன்னரே அவர் இறந்த செய்தி வந்தது. அவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் 'எந்திரன் ' படத்தில் பாட வைத்து இருப்பேன் என பேசி இருந்தார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். 


ஒரு வேளை இது மட்டும் நடந்து இருந்தால் தமிழ் சினிமாவின் முக்கியமான  நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்து இருக்கும். மேலும் 'எந்திரன்' திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கவனம் கிடைத்து இருக்கும்.