Siragadikka Aasai Serial August 7 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் சீதா காலேஜில் ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸான விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடத்திலும் சொல்லலாம் என மீனா சொல்கிறாள். அண்ணாமலை இந்த விஷயத்தை கேட்டு மிகவும் சந்தோஷப்படுகிறார்.
"அண்ணாமலை : உங்க அப்பா ஆசையை நீ தான் மீனா நிறைவேத்தி இருக்க. உன்னோட படிப்பை கூட விட்டுட்டு தம்பி தங்கச்சிக்காக கஷ்டப்பட்டு அவங்களை படிக்க வைச்சு இருக்க.
மீனா : நான் என்ன மாமா பண்ணேன். சீதா தான் நல்ல படிச்சு பாஸ் பண்ணி இருக்கா" என்கிறாள்.
விஜயாவிடம் இந்த விஷயத்தை சொல்ல அவள் மிகவும் குத்தலாக என்ன கலெக்டருக்கா படிச்சு பாஸ் ஆகிட்டா. இந்த காலத்துல டிகிரி பாஸ் பண்ணறது எல்லா பெரிய விஷயமா? இத போய் இவ்வளவு பெருசா பேசுறீங்க...
ரோகிணியும் மனோஜும் அங்கு வர விஷயத்தை கேட்டு ரோகிணி வாழ்த்து சொல்கிறாள். ஆனால் மனோஜ் இளக்காரமாக "ஒரு டிகிரி பாஸ் பண்ணறது பெரிய விஷயமா? என்னை மாதிரி நாலு டிகிரி வாங்குறது தான் கஷ்டம்" என பெருமையாக பேசி கொள்கிறான்.
"முத்து : நீ அப்பா காசை எல்லாம் புடுங்கி படிச்ச. உனக்கு வேண்டியது எல்லா உடனே கிடைச்சுது. ஆனால் சீதா மாதிரி எல்லாத்துக்கும் கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்றது ரொம்ப பெரிய விஷயம். அதெல்லாம் உனக்கு எங்க தெரியப்போகுது" என்கிறான்.
ஸ்ருதியும் ரவியும் கூட இந்த விஷயம் கேட்டு சந்தோஷப்படுகிறார்கள். சீதாவுக்கு பரிசு வாங்கி கொடுக்கலாம் என சொல்கிறாள் ஸ்ருதி. மீனாவும் முத்துவும் சீதாவை பார்ப்பதற்காக கிளம்புகிறார்கள்.
கோயிலில் அனைவரும் சீதாவை பாராட்டுகிறார்கள். சீதாவுக்கு பட்டதாரி கோர்ட் வாங்கி வந்து கொடுத்து அதை மாட்டி கொள்ள சொல்கிறார்கள். சீதா அப்பாவை நினைத்து கரும்பு மிஷனை பார்த்து அழுகிறாள். அவளை சமாதானம் செய்ய சத்யா சீதாவை போட்டோ எடுக்க சொல்கிறான். அனைவரும் சேர்த்து சந்தோஷமாக போட்டோ எடுத்து கொள்கிறார்கள். மீனாவும் முத்துவும் வந்து அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
சீதா குடும்பத்தை நினைத்து பொறுப்பாக படித்து பாஸ் செய்ததை பெருமையாக சொல்லி வாழ்த்துகிறான். மேல் படிப்பு படிக்கணும் என்றாலும் நான் படிக்க வைக்கிறேன் என சொல்கிறான் முத்து.
"சீதா : இல்ல மாமா நான் படிக்க போறது இல்ல. வேலைக்கு போக போறேன். அம்மாவும் மீனாவும் எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அவங்களை நான் நல்லபடியா பாத்துக்கணும்" என்கிறாள்.
"மீனா : சத்யா, நீயும் சீதா மாதிரி படிச்சு பெரிய ஆளா வரணும்
முத்து : தேவியில்லாததை நினைத்து ஆசைப்படாத. அதுக்கு எல்லாம் பொறுப்பு என ஒன்னு வேணும். குடும்பம் கஷ்டபடுதே அவங்களுக்காக நாம ஒழுங்கா இருக்கணும். ஊதாரி தனமாக சுத்த கூடாது என தெரியணும்" என்கிறான். அதை கேட்டு சத்யாவுக்கு கோபம் வருகிறது.
சீதா கோர்ட்டை மீனாவுக்கு மாட்டி போட்டோ எடுத்து கொள்கிறாள். "உன்னால தான் அக்கா நான் இந்த நிலைமையில இருக்கேன்" என சொல்லி நன்றி சொல்கிறாள்.
மீனாவை கொஞ்ச நேரம் அம்மா தங்கையுடன் இரு என சொல்லிவிட்டு முத்து கிளம்புகிறான். "என்ன சீதாவை பாராட்டுற மாதிரி என்னை அவமானப்படுத்துறாரா?" என சத்யா சொல்ல "அவர் பேச்சே அப்படித்தான். அக்கறையை கூட அதட்டலாக தான் சொல்வார்" என்கிறாள் மீனா.
அடுத்த நாள் மனோஜும் ரோகிணியும் ஷோரூமில் கணக்கு பார்க்க அப்போது பணம் குறைவது பற்றி ரோகிணி மனோஜிடம் கேட்கிறாள். வீட்டுக்கு போய் சாப்பிட முடியல என மதியம் ஹோட்டல் போய் சாப்பிடுறேன். நான் ஒரு பிசினஸ் மேன். சாதாரண இடத்தில் எப்படி சாப்பிட முடியும் அதனால நல்ல ஹோட்டலா போய் சாப்பிடுவேன் என்கிறான். நீ உன்னோட செலவை குறைச்சுக்கணும் இல்ல கஷ்டம் தான் என்கிறாள் ரோகிணி. அப்போது பேங்கில் இருந்து வந்த ஒருவர் உங்களுடைய கணக்கு வழக்குகளை பார்த்து 10 லட்சம் லிமிட் உள்ள கிரெடிட் கார்டு வழங்குகிறோம் என்றதும் மனோஜ் வாயை பிளந்து பார்க்கிறான். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.