Siragadikka Aasai serial August 29 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 29 ) எபிசோடில் மீனா சீதாவை தேடி ஹாஸ்பிடலுக்கு போகிறாள். ரோகிணி விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் எப்படி தெரிய வந்தது அதனால் என்னென்ன பிரச்சினை நடந்தது ரோகிணியின் முதல் பிரசவம் எப்படி அபார்ஷன் ஆனது என அனைத்தையும் மீனா சீதாவிடம் சொல்கிறாள். மேலும் இது பற்றி இனி யாரிடமும் விசாரிக்க தேவையில்லை என சீதாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறாள் மீனா. 


 




சீதாவுக்கு அட்மின் ஆபீஸரிடம் இருந்து அழைப்பு வருகிறது. சீதா ரிசப்ஷனில் ரோகிணி பற்றி விசாரித்ததை கண்டித்து அவளை வேலையாக விட்டு போகுமாறு சொல்கிறார். ரோகிணி மேல் அதிகாரியிடம் கம்ப்ளெயிண்ட் கொடுத்தது பற்றி சொல்லி திட்டுகிறார். சீதா தன்னுடைய குடும்ப நிலையை பற்றி எடுத்து சொல்லி புரிய வைக்க ஆபீசரும் வார்னிங் கொடுத்து சீதாவை இந்த முறை வேலையை விட்டு அனுப்பாமல் விடுகிறார். 


 


மீனா உடன் பூ தொழில் செய்பவர்கள் நைட்டுக்குள் பூ கட்டி கொடுக்க ஆர்டர் ஒண்டு வந்து இருப்பதாக சொல்லி மீனாவையும் உடன் அலைகிறார்கள். ஆனால் மீனாவோ வீட்டில் சமையல் வேலை இருக்கிறது அதனால் என்னால வர முடியாது என சொல்லிவிடுகிறாள். அவர்களும் சரி என சொல்லி கிளம்புகிறார்கள். 


 



 


மீனா முத்துவுக்கு போன் செய்து பேச அப்போது முத்து தனக்கு சவாரி இருப்பதால் நைட் வீட்டுக்கு வர முடியாது என சொல்ல மீனா கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போகிறாள். மீனா ப்ளீஸ் போதும் என முத்து கெஞ்ச மீனா சிரித்து கொண்டே போனை வைத்து விடுகிறாள். 


ரவி ஸ்ருதிக்கு போன் செய்து நைட் ஒர்க் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது அதனால் வீட்டுக்கு வர லேட் ஆகும் என சொல்ல ஸ்ருதி ரூம் கதவை தீர்க்க மாட்டேன் என சொல்லி சண்டைபோட்டு வைத்துவிடுகிறாள். ரவி மீனாவுக்கு போன் செய்து ஸ்ருதிடம் சொல்லி புரிய வைக்க சொல்கிறான்.


 



 


முத்து மற்றும் ரவி நைட் வீட்டுக்கு வராததால் மீனாவும் ஸ்ரீதியும் சேர்ந்து என்ன பண்ணலாம் என யோசிக்கும் போதும் பேய் படம் பார்க்கலாம் என ஸ்ருதி ஐடியா கொடுக்கிறாள். பின்னர் இருவரும் போனிலேயே பேய் படம் பார்த்து கொண்டு இருக்கும் போது மீனா பயமா இருக்கு என அலற அவர்கள் சிரிப்பு சத்தத்தை கேட்டு வழியே வந்த விஜயா இருவரையும் திட்டுகிறாள். பேய்கு ஒய் பயந்துகிட்டு. எனக்கு பேய்யை பார்த்தால் பயம் எல்லாம் இல்லை என திமிராக சொல்லிவிட்டு செல்கிறாள். 


ஸ்ருதியோ விளையாட்டுத்தமனாக பேய் ஆடியோக்களை விஜயா ரூம் வாசல் வெளியில் வயது பிளே பண்ண விஜயாபயத்தில் அலறுகிறாள். இது தான் இன்றய கதைக்களம்.