தமிழில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சியாக ஜீ தமிழ் உள்ளது. இதில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கை மண்டபத்தில் காணாமல் அனைவரும் பதற்றத்தில் இருக்க இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மண்டபத்திற்கு வரும் உண்மையான தீபா:


ஒரு பக்கம் கார்த்திக் எங்கே போனான் என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்க அருண், ஆனந்த் போன் செய்ய கார்த்திக் போனை எடுக்காமல் இருக்கிறான். இன்னொரு பக்கம் தீபா ஆட்டோவில் மண்டபத்தை நோக்கி வேகவேகமாக வந்து கொண்டிருக்கிறாள். மற்றொரு பக்கம், மணமேடையில் இதுவரை ரியா தீபா கெட்டப்பில் இருந்து வந்த நிலையில். தற்போது முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால் தற்போது ரம்யா தீபாவின் முகத்திரையை அணிந்து கொண்டு அமர்ந்து இருக்கிறாள். இந்த சமயத்தில் தீபா கல்யாண மண்டபத்திற்கு வந்து விட அனைவரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகின்றனர். 


தீபா நான் தான் உண்மையான தீபா என்று சொல்ல, ரம்யா நான் தான் உண்மையான தீபா என்று சொல்கிறாள். தர்மலிங்கம், ஜானகி உட்பட எல்லாரும் உண்மையான தீபா யார்? என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். 


அம்பலப்படுத்திய அம்பிகா:


இந்த நிலையில் மயக்கத்தில் இருந்த அம்பிகா எழுந்து வெளியே வர ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். வெளியே இருப்பவள் தான் உண்மையான தீபா, மணமேடையில் இருப்பது ரியா என்று முகத்திரையை கிழிக்க அது ரம்யா என தெரிய வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.