✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Siragadikka Aasai serial August 21 : திரும்பவும் முருங்கை மரம் ஏறிய முத்து... விஜயாவுக்கு கொண்டாட்டம்; மீனாவுக்கு திண்டாட்டம்...

லாவண்யா யுவராஜ்   |  22 Aug 2024 06:52 PM (IST)

Siragadikka Aasai Today : முத்து சொன்னா பேச்சை மீனா கேட்காததால் மீண்டும்  குடிகாரனாக மாறிய முத்து. சந்தோஷத்தில் கொண்டாடும் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோடில் என்ன நடக்கிறது.    

சிறகடிக்க ஆசை ஆகஸ்ட் 21

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோட்டில்  முத்து சொல்லியும் கேட்காமல் மீனா கோயிலுக்கு சென்றதால் கோபமான முத்து வீட்டுக்கு குடித்துவிட்டு வருகிறான். 
 
"முத்து:   நான் போக கூடாது என சொல்லியும் நீ போய் இருக்க. அப்ப அவ்வளவு தான். உனக்கு என் மேல இருக்க மரியாதை.
 
 மீனா:  எல்லாரும் வற்புறுத்தி கூப்பிட்டாங்க. நான் எப்படி வர முடியாதுன்னு சொல்றது.
 
 முத்து:  அப்போ உனக்கு என்ன விட உன் தம்பி தான் ரொம்ப முக்கியம்.
 
 மீனா :  கல்யாணம் ஆயிட்டா எல்லாமே இந்த வீடு தான்னு இருக்கனுமா? அம்மா வீட்ல இருக்கவங்க எல்லாம் மறந்துடணுமா?
 
முத்து:  நான் உன் தம்பி கூட மட்டும் தான் பேச வேணாம்னு சொன்னேன் "  என்ன இப்படியே அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது.
 
 
 
 
முத்து நான் கீழே படுத்துக் கொள்கிறேன் என சொல்ல மீனா அவனை  சாப்பிட்டு படுக்க சொல்கிறாள்.  வெளியில் நடக்கும் பிரச்சனையை விஜயா வந்து பார்த்து சந்தோஷம் அடைகிறாள். 
 
 "விஜயா : நான் இன்னும் கொஞ்சம் பெரிய பிரச்சனை நடக்கும் நெனச்சேன்.  இது கம்மிதான்.
 
 மீனா:  பையன் குடிச்சுட்டு வீட்டுக்கு வந்திருக்கான். ஏன் அத பத்தி கவலை இல்ல உங்களுக்கு" என்கிறாள்.
 
 
 அடுத்த நாள் காலை  அண்ணாமலை முத்துவை பற்றி விசாரிக்கிறார்.  முத்து எழுந்ததும் அவன் குடித்துவிட்டு வந்து அப்பாவுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மறைந்து மறைந்து ரூமுக்கு செல்கிறான்.  மீனா காபி கொடுத்தும் காபி டீ எல்லாம் எனக்கு தேவை இல்லை, இனிமே சரக்கு தான் என சொல்கிறான் முத்து.
 
 குளித்துவிட்டு ரெடியான முத்து கார் சாவியை தேட மீனா அதை ஏற்கனவே ஒளித்து வைத்துவிடுகிறாள்.  நேத்து நைட் நிதானத்துல தானே வந்த என அண்ணாமலை கேட்கிறார்.  இனிமே குடிச்சிட்டு வரதா இருந்தா வீட்டுக்கு வராத  என்கிறார்.  சாவி கிச்சனில் தான் இருந்தது என சொல்லி மீனா கொண்டு வந்து கொடுக்க முத்து கிளம்புகிறான்.
 
 
கார் ஷெட் சென்ற முத்து சவாரிக்கு செல்லாமல்  இருப்பதை பார்த்து செல்வம் என்ன நடந்தது என கேட்கிறான்.  செல்வத்திடம் முத்து சொல்லிக் கொண்டே இருக்கும் போது மீனாவின் அம்மாவும் தங்கை சீதாவும் கார் ஷெட்டுக்கு வருகிறார்கள்.
 
 
முத்துவிடம் மீனாவின் அம்மா மன்னிப்பு கேட்கிறார்.  "மீனா வர மாட்டேன்னு தான் சொன்னா. நாங்க தான் அவளை வற்புறுத்தி வர சொன்னோம்.  என்ன இருந்தாலும் அவள் தான் இவங்க ரெண்டு பேரையும் தூக்கி வளர்த்தவ.  மீனா மேல தயவுசெய்து கோச்சுக்காதீங்க மாப்பிள்ள என்ன தப்புன்னாலும்  நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்"  என்கிறார் மீனாவின் அம்மா.
 
 "அவன் சரி இல்லை. நிறைய தப்பான வேலை செய்றான். வீட்ல யாருமே கண்டிக்கலைன்னா அவனுக்கு பயம் இருக்காது"  என்கிறான் முத்து. 
"அவன் மேல இருக்க அக்கறைல தான மாப்ள சொல்றீங்க. அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டான்" 
 
 
" மீனா மேல கோவ படாதீங்க மாப்ள... அவள அவ கிட்ட நீங்க கோச்சுகிட்டா எங்க போவா.  உங்கள மீறி எதுவும் செய்யமாட்டா"  என்கிறார் மீனாவின் அம்மா.
 
" ஆனா அவளோட செயல் காமிக்குது இல்ல அவ என் மேல எவ்வளோ மரியாத வச்சிருக்கான்னு".
 
"சத்யா என்னை அங்க வரக்கூடாதுன்னு சொன்னானா இல்லையா. எனக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு அவ எப்படி போகலாம்" என பேசிக்கொண்டு இருக்கும் போது அவனுக்கு போன் வருகிறது. 
 
எனக்கு சவாரி வந்துருச்சு. நான் கிளம்பணும்  என சொல்லிவிட்டு கிளம்புகிறான் முத்து.   அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. 
Published at: 22 Aug 2024 06:52 PM (IST)
Tags: Siragadikka Aasai serial siragadikka aasai today episode Siragadikka Aasai August 21
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai serial August 21 : திரும்பவும் முருங்கை மரம் ஏறிய முத்து... விஜயாவுக்கு கொண்டாட்டம்; மீனாவுக்கு திண்டாட்டம்...
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.