Baakiyalakshmi serial August 22 : விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடரான 'பாக்கியலட்சுமி' தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 22) எபிசோடில் ஈஸ்வரி எழிலுக்கு போன் பண்ணி தாத்தாவின் பிறந்தநாளுக்கு வருமாறு கூப்பிடுகிறார். ஆனால் எழிலோ "நாங்க அங்க வந்த உங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா" என சொல்ல "சரி டா அப்போ நீ வராத" என சொல்லி போனை வைத்து விடுகிறார். எழில் அப்படி சொன்னதை நினைத்து அழுது கொண்டு இருந்த ஈஸ்வரியிடம் "என்ன ஆச்சு யார் கிட்ட பேசுன?" என ராமமூர்த்தி கேட்கிறார். ஈஸ்வரி எழிலிடம் பேசியது பற்றியும் அவன் வரேன் என சொல்லாதது பற்றியும் சொல்லி வருத்தப்பட ராமமூர்த்தி ஈஸ்வரி சமாதானம் செய்கிறார்.
எழிலை தாத்தாவின் பிறந்தநாளுக்கு போக சொல்லி அமிர்தா வற்புறுத்துகிறாள். "பாட்டியே உங்களை போன் பண்ணி கூப்பிட்டு இருக்காங்க. நான் வந்தா தான் ஏதாவது பிரச்சினை வரும். நீங்க போயிட்டு வாங்க" என அமிர்தா சொல்ல "ஏன் அமிர்தா இப்படி பிரிச்சு பேசுற. நீ வரலைன்னா நானும் போகல" என்கிறான் எழில்.
செழியன் மிகவும் பரபரப்பாக தாத்தாவின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதை பார்த்து பூரித்து போகிறாள் ஜெனி. "நீ இப்படி இருக்கணும்னு தான் நான் ஆசைப்பட்டேன் செழியா" என்கிறாள். "எழில் வராம நடக்குறது தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவன் மட்டும் இருந்து இருந்தா எந்த வேலையும் என்னை செய்ய விடாம அவனே எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வான்" என தம்பியை நினைத்து வருத்தப்படுகிறான் செழியன்.
இனியா பாக்கியாவிடம் எழில் வீட்டை விட்டு போய் இரண்டு நாள் ஆனது பற்றியும் அவர்கள் மூவரையும் மிகவும் மிஸ் பண்ணுவது பற்றியும் சொல்கிறாள். "அண்ணே நாளைக்கு வருமா அம்மா? நீ அண்ணனை வர சொல்லி கூப்பிட்டியா?" என இனியா கேட்க "இல்ல நான் கூப்பிடல. அவனுக்கே தெரியும். வீட்ல கூப்பிட்டு இருப்பாங்க" என்கிறாள் பாக்கியா. "நான் உன்ன ஒன்னு கேட்கட்டுமா அம்மா. நானும் செழியன் அண்ணனும் நிறைய தப்பு பண்ணி இருக்கோம். ஆனா அப்ப கூட நீ எங்களை வீட்டை விட்டு அனுப்பல. ஆனா எழில் அண்ணன் உன் மேல உயிரையே வைச்சு இருக்கு. அத ஏன் மா வீட்டை விட்டு போக சொன்ன?" என இனியா கேட்க " எல்லாம் காரணமாதான் இனியா" என்கிறாள் பாக்கியா. "அப்போ இனிமே நான் ஏதாவது தப்பு பண்ணா என்னையும் வீட்டை விட்டு அனுப்பிடுவியா? நான் இனிமே எந்த தப்பு பண்ண மாட்டேன். நீ பெருமை படுற மாதிரி தான் இருப்பேன். என்னை அனுப்பிடுவியா சொல்ல மா" என்கிறாள் இனியா. " அனுப்புறதுக்கான காரணம் இருந்தா அனுப்புவேன்" என பாக்கியா சொல்கிறாள்.
ஈஸ்வரி போனையே நொண்டி கொண்டு இருக்கிறார். எப்படா 12 மணி ஆகும் ராமமூர்த்திக்கு வாழ்த்து சொல்லலாம் என காத்திருக்கிறார். அதை சொல்லாமல் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்கிறார் ஈஸ்வரி. இருவரும் சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டு இருக்கிறார்கள் அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.