விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தான் 'சிறகடிக்க ஆசை'. 2023-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், கடந்த 2 வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை, குமரன் என்பவர் இயக்கி வருகிறார். சில தொடர்களில், ஒரு பிரச்னையை வைத்து ஒரு மாசம் ஜவ்வு போல் இழுக்கும் நிலையில், இந்த சீரியலில் எத்தனை ட்விஸ்ட் வைத்தாலும் அதை ஒரே வாரத்தில் முடிவுக்கு கொண்டு வருவது இந்த தொடரின் ஸ்பெஷாலிட்டி என கூறலாம்.
இதன் காரணமாகவே, இந்த தொடருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த தொடர் டாப் 10 இடங்களில் ஒன்றாக இடம்பெற்று வருகிறது. இந்த சீரியில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆர் சுந்தர்ராஜன், அனிலா குமார், பாக்யஸ்ரீ (பாக்கியலட்சுமி) ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சப்போர்டிங் ஆர்டிஸ்ட்டாக (வித்யா) ரோலில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். கடந்த ஒரு வாரமாக இவரது அந்தரங்க வீடியோ சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ஆனால் ஸ்ருதி தரப்பில் இருந்து அது AI டீப் ஃபேக் வீடியோ என தெரிவித்துள்ளார். ஆனால் நெட்டிசன்கள் சிலர் இவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி காஸ்டிங் கோச் பிரச்சனையில் சிக்க வைத்திருக்கலாம் என கூறி வருகிறார்கள்.
வித்யா மிகவும் காட்டமாக நேற்று பதிவு ஒன்றை போட்டு பதிலடி கொடுத்தார். இந்த பிரச்சனை ஒருபுறம் பரபரப்பாக சென்றுகொண்டிருக்க, இவர் தற்போது நடித்து வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் தொடரில் வாங்கி யாரும் சம்பளம், மற்றும் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, யார் யார் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம். இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வெற்றி வசந்த் (முத்து) மற்றும் ஹீரோயின் கோமதி பிரியாவிற்கு (மீனா) ஒரு நாளைக்கு ரூ.15,000 முதல் 20,000 வரை சம்பளமாக பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதே போன்று ஆர் சுந்தர்ராஜனுக்கு (அண்ணாலை) ரூ.12000 சம்பளமாக பெருகிறாராம். சல்மா அருண் (ரோகிணி) ரூ.10000, ரவி மற்றும் ஸ்ருதிக்கு ரூ.10000, சத்தியா, சீதா, வித்யா (ஸ்ருதி நாராயணன்) ஆகியோருக்கு ரூ.5000 வீதம் வழங்கப்படுகிறதாம். இந்த தகவல் அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.