சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.


மீனா செல்வத்தின் கார் ஷெட்டுக்கு சென்று, செல்வம் உள்ளிட்ட அவரின் நண்பர்களிடம், ”அவரு கார வித்துட்டு ஆட்டோ ஓட்டுறாருனு எனக்கு நல்லாத் தெரியும் அப்டி என்ன அவருக்கு பணத்தேவை வந்துச்சி?” என கேட்கிறார். ”நாங்க வாங்கின வாட்டி காசை எல்லாம் உடனே கொடுக்கணும்னு பிரச்சனை பண்ணிட்டான்மா” என சொல்கிறார் செல்வம். “நான் அவனை சும்மா விட மாட்டேன்” என சொல்லி அங்கிருந்து செல்கிறார் மீனா. சிட்டின் அலுவலகம் செல்லும் மீனா, ”ஏய் சிட்டி இன்னொரு தடவ என் புருஷன் வழியில நீ வந்தனு தெரிஞ்சதுனு வை அசிங்கப்பட்டு போய்டுவ நீ ஜாக்கிரதை” என சொல்லி விட்டு அங்கிருந்து செல்கிறார். சிட்டி உடனே அவரிடம் இருக்கும் அடி ஆட்களிடம் ”இவ புருஷனோட இவ ஒன்னா இருக்க கூடாது” என்கிறார். ”அதுக்கு நம்ம என்ன பன்ன முடியும்?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். ”அதான் சத்யா நம்ம கைக்குள்ள இருக்கான் இல்ல” என்கிறார் சிட்டி. ”நீங்க ஏன் காரை வித்திங்கனு எனக்கு தெரியும்” என முத்துவிடம் சொல்கிறார் மீனா. ”அந்த சிட்டியால தானே நீங்களாவது முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல” என்கிறார் மீனா. இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது. 


நேற்றைய எபிசோடில் “வித்யாவும் ரோகிணியும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கின்றனர். அப்போது ஒரு அட்டோவை சவாரிக்கு அழைக்கின்றனர். பார்த்தால் அந்த ஆட்டோவை முத்து ஓட்டி வருகிறார். ரோகினி வித்யாவிடம் சொல்லி  கார் ஓட்டிக்கிட்டு இருந்தவன் ஆட்டோ ஏன் ஓட்டுறான் என கேளு என சொல்லுகிறார். இது முத்துவின் காதில் விழுந்து விடுகிறது. 


உடனே முத்து செல்வத்திற்கு கால் பண்ணி தன் கார் நண்பனிடம் இருப்பதாக கூறி சமாளிக்கின்றார். ரோகிணியை இறக்கி விட்ட பிறகு தெரிந்தவர் ஒருவர் வந்து கார் எங்கே என்று முத்துவிடம் கேட்கிறார். காரை வித்து விட்டதாக சொல்கிறார் முத்து. இது ரோகிணி காதில் விழுந்து விடுகிறது. ரோகிணி நேராக மனோஜிடம் வந்து இந்த விஷயத்தை சொல்லுகிறார். 


பின் முத்து ஆட்டோ ஓட்டும் விஷயத்தை விஜயாவிடம் சொல்கிறார் ரோகிணி. ஆனால் விஜயா அதை கூலாக எடுத்துக்கொள்கிறார். ஆனால் ரோகிணி ”அத்தை அந்த கார் வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சி வாங்கின காசுல வாங்கினது” எனக்கூறுகிறார். உடனே விஜயா தான் முத்துவிடம் இது குறித்து கேட்பதாக சொல்கிறார். அதற்கு ரோகிணி ”நீங்க கேட்டா தான் அவரு பதில் சொல்ல மாட்டாரே” என சொல்லுகிறார். யாரு கேட்டா சொல்லுவாங்களோ அவங்க கிட்ட சொல்லுறேன் என கூறிவிட்டு விஜயா செல்கிறார். இத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது.