Siragadikka Aasai Serial April 25 to 27 Promo: சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது.


ஜீவா பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டும் என முத்துவிடம் சொல்கிறார். முத்து ரோகிணியின் பார்லருக்கு ஜீவாவை அழைத்துச் செல்கிறார். ரோகிணி ஜீவாவை சேரில் உட்கார வைத்து விட்டு மனோஜுக்கு ஃபோன் செய்து ஜீவா வந்திருப்பதை சொல்கிறார். ”புடிச்சி வை இதோ வந்துடுறேன்” என்று மனோஜ் சொல்கிறார்.  மனோஜ் பார்லருக்கு வந்து ”ஒழுங்கா என் பணத்தை கொடுத்தா நீ பொழச்சி போனு நான் விட்றுவேன் இல்லனு வை” என்று கையில் ஊசியை பிடித்துக் கொண்டு மனோஜ் ஜீவாவை மிரட்டுகிறார். அப்போது அங்கு போலீஸ் வருகிறது. ”முதல்ல இவள அரஸ்ட் பண்ணுங்க சார்” என்று மனோஜ் சொல்கிறார். ”ஸ்டேஷன் போய்ட்டு பேசிக்கலாம் வாங்க” என்று போலீஸ் சொல்கிறார். ”முதல்ல இவள அரஸ்ட் பண்ணி விசாரிங்க சார்” என்று மனோஜ் சொல்கிறார். அதற்கு ஜீவா ”இவங்க பொய் சொல்றாங்க சார்” என்று சொல்கிறார். ”நோ பார்க்கிங்ல வண்டிய விட்டுட்டேன் போலீஸ் எடுத்துட்டு வந்துட்டாங்க” என்று மீனா முத்தூவுக்கு கால் செய்து அழுது கொண்டே பேசுகிறார். பின் முத்துவும் மீனாவும் போலீஸ் ஸ்டேஷன் செல்கின்றனர். அங்கு தான் மனோஜ், ரோகிணி ஜீவாவும் இருக்கின்றனர்.  இத்துடன் ப்ரோமோ நிறைவடைந்தது.  


சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் குடும்பத்தை மையமாகி வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று மகன்கள், மூன்று மருமகள்கள் பாஷியாலிட்டி பார்க்கும் மாமியார் ஆகியவர்கள் தான் சீரியலுக்கு கண்டெண்ட். விஜயா ஏழை மருமகளான மீனாவை எப்போதும் கொடுமைப்படுத்துவது. ரோகிணி தான் யார் என்பதை மறைத்து பணக்கார மருமகளாக நடித்துக் கொண்டு இருப்பது, முத்து அவ்வப்போது அநீதியை தட்டிக் கேட்பது இதுதான் சீரியலுக்கு மெயின் கண்டெண்டாக உள்ளது.


முத்து அடிக்கடி மனோஜ் தன் காதலியிடம் தன் அப்பாவின் ரிடயர்மெண்ட் பணமான 28 லட்சத்தை பறிகொடுத்ததை சொல்லி காண்பித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பணத்தை எடுத்துக் கொண்டு தலை மறைவான ஜீவா மீண்டும் சென்னை வந்திருக்கிறார். மனோஜ் ஜீவாவை எப்போது பார்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர்கள் இருவரும் சந்திப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது. எனவே சீரியல் வழக்கத்தை விட மேலும் விறு விறுப்பாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க 


Ethirneechal Serial: சிங்கமாக சீறும் பெண்கள்! ஆச்சி போட்ட கண்டிஷனால் கடுப்பான குணசேகரன்... எதிர்நீச்சலில் ட்விஸ்ட்!


Siragadikka Aasai Serial: உப்பில்லாத சாப்பாட்டை சாப்பிட சொல்லும் விஜயா..கடுப்பில் ரோகிணி - சிறகடிக்க ஆசையில் இன்று!