சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 25) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

தர்ஷினியும் சித்தார்த்தும் மணமேடையில் உட்கார்ந்து இருக்க "கல்யாணத்தை இன்னும் அரை மணி நேரத்தில் முடித்தாக வேண்டும்" என குணசேகரன் ஐயரை அவரசப்படுத்தி மிரட்டுகிறார். அவரின் அவசரத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆச்சி "எல்லா சடங்கையும் பண்ணி இந்தக் கல்யாணத்தை நடத்துவதா இருந்தா நாங்க எல்லாரும் இங்க இருக்கோம். இல்லைனா இப்போவே இங்க இருந்து கிளம்புறோம்"  என ஆணித்தரமாக சொல்லிவிடுகிறார். அதைக் கேட்டு குணசேகரனும் உமையாளும் டென்ஷனாகிறார்கள். 

 


 

ஜனனியுடன் நந்தினி, ஈஸ்வரி மற்றும் ரேணுகா மண்டபத்தை தேடிக் கண்டுபிடித்து வந்து விடுகிறார்கள். ஆனால் உஷாராக கேட்டை பூட்டி வைக்க சொல்லி விடுகிறார் குணசேகரன். நால்வரும் வந்து கேட்டை தட்டி "யாராவது கேட்டை துறந்துவிடுங்க" எனக் கத்துகிறார்கள். வெளியே காவலுக்காக வைக்கப்பட்டு இருந்த ராமசாமியின் அடியாட்கள் அவனுக்கு போன் செய்து "யாரோ நாலு பொம்பளைங்க வந்து கேட்டுகிட்டே கத்திக்கிட்டு இருக்காங்க அண்ணேன்" என சொல்ல ராமசாமி ஜன்னல் வழியாக பார்க்கிறான். வந்திருப்பது ஜனனியும் மற்றவர்களும் என குணசேகரனிடம் சொல்ல "அடிச்சு காலிபண்ண சொல்லுங்க. அவளுங்க உள்ள வரக்கூடாது" என ஆர்டர் போடுகிறார் குணசேகரன். 

 

ஆனால் வீர மங்கைகள் கேட் மேல ஏறி தடைகளைத் தாண்டி வெற்றிநடைபோட்டு ஆவேசமாக மண்டபத்துக்குள் நுழைகிறார்கள். அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ. 

 

 


 

நேற்றைய எபிசோடில் ஐயரின் மனைவி கடையில் பொருட்கள் வாங்க வந்த இடத்தில் கணவர் திருட்டு கல்யாணம் செய்து வைக்கும் ஒரு கும்பலுடன் மாட்டிக்கொண்டதாக சொல்லவும், அதைத் தள்ளி நின்று கேட்ட ஜனனிக்கு சந்தேகம் வருகிறது. அந்த மாமி திருமண மண்டபம் பற்றி சொன்னதை வைத்து மீண்டும் அந்த மண்டபத்துக்கு போன் செய்கிறாள். மணப்பெண்ணுக்கு மேக்கப் போடுவதற்காக எங்களை வரச்சொன்னார்கள் என பொய் சொல்லி விலாசத்தை உறுதி செய்து கொள்கிறாள். முதலில் உண்மையை உளறி மண்டப உரிமையாளர் பின்னர் சுதாரித்து கொண்டு அப்படியெல்லாம் இங்க எதுவும் கல்யாணம் நடக்கவில்லை என மழுப்பிவிடுகிறார்.

 

தர்ஷினி புடவை கட்ட மறுக்கிறாள். உமையாள், கீர்த்தி யார் சொல்லியும் மதிக்கவில்லை. குணசேகரன் வந்து தர்ஷினியை மிரட்டுகிறார். குணசேகரன் தர்ஷினியை கடத்தி வைத்து ட்ராமா போட்டதை எல்லாம் நினைத்து பார்த்து குணசேகரனை முறைக்கிறாள். 

 


 

மண்டப உரிமையாளர் வந்து யாரோ ஒரு பெண் போன் செய்து கல்யாணம் பற்றி விசாரித்தது பற்றி சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் ராமசாமியை அழைத்து அடியாட்களை தயாராக வைக்கச் சொல்கிறார். கல்யாணத்தை விரைவாக முடிக்க சொல்லி ஐயரை வற்புறுத்துகிறார். சடங்குகள் செய்ய ஐயர் மணப்பெண்ணின் அம்மாவை அழைக்க "பொண்ணோட அம்மா உயிரோட இல்ல" என சொன்னதும் அனைவரும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். இதுதான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) கதைக்களம்.