பிரபலமான தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் கடந்த ஆண்டு எளிமையான முறையில் நடைபெற்றது. இருவரும் திடீரென சஸ்பென்சாக திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து திரையுலகத்தினர் மாற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தனர். அவர்களின் திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங் ஜோடிகளாக இருந்து வந்த ரவீந்தர் - மஹாலக்ஷ்மி தம்பதி, அவர்களின் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு தருணத்தையும் அடிக்கடி சோசியல் மீடியாவில் போட்டோ அல்லது வீடியோ போஸ்ட் மூலம் பகிர்ந்து மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தனர். அதன் மூலம் ரசிகர்களுடன் என்றுமே தொடர்பில் இருந்து வந்தார்கள். அவர்களின் திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தாலும் எதையுமே பொருட்படுத்தாமல்,  இருவரும் உல்லாசமாக தங்களின் திருமண வாழ்க்கையை அனுபவித்து வந்தார்கள். பல யூடியூப் சேனல்களுக்கும் ஜாலியாக பேட்டியளித்த வந்தனர்.


 



 


அந்த வகையில் நேற்று கணவர் ரவீந்தர் பிறந்தநாளை முன்னிட்டு மனைவி மஹாலக்ஷ்மி அவரை சர்ப்ரைஸ் செய்யும் வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். ரவீந்தரின் 6 அடி உயர புகைப்படத்தை அவருக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். அந்த பரிசை மஹாலக்ஷ்மி பிரிப்பது போன்றும் பின்னர் இருவரும் அந்த புகைப்படத்துடன் சேர்ந்து போஸ் கொடுப்பது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ போஸ்டுடன் அழகான குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.  "என்னை எப்போதும், என் நினைவுக்கு கொண்டு வரக்கூடிய மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் தான் என்னுடைய பில்லர், அதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்! லவ் யூ மை லைஃப்.. லவ் யூ மோர்.." என பதிவிட்டு இருந்தார். மேலும் இந்த ஓவியத்தை அழகாக வடிமைத்து கொடுத்த ஹர்ஷா கிராபிட்ஸுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இந்த நாளை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றிகள் என்றும் நான் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பானதாக வழங்கியதற்காகவும் நன்றி தெரிவித்துக்கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் மஹாலக்ஷ்மி.






மஹாலக்ஷ்மியின் இந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு ஏராளமான லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் குவித்து வருகிறது. ரசிகர்களும் ரவீந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.