விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்கியாவின் வீட்டில் வந்து தங்கி கொண்டு இது என்னுடைய வீடு என்றும் இங்கே நீ இருக்க கூடாது என்று பாக்கியலட்சுமியை வெளியேற  சொல்கிறார்கள். கோபி பாக்கியாவிடம் பதினெட்டு லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டால் நாங்கள் இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவோம் என்றும் அதை பாக்கியா செட்டில் செய்ய ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து இருந்தார் கோபி. அந்த ஒரு மாத கால அவகாசம் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் இன்று என்ன நடக்க உள்ளது என்பதை பார்க்கலாம். 


 




கடந்த வாரம் முழுவதும் பாண்டிச்சேரியில் சமையல் ஆர்டருக்காக பாக்கியாவும், உறவினரின் வீடு திருமணத்துக்காக கோபி மற்றும் ராதிகாவும் ஒரே இடத்தில சந்தித்து கொண்டனர். அங்கு நடைபெற்ற கூத்து ஒரே ஸ்வாரஸ்யமாக இருந்தது. அதனை தொடர்ந்து இந்த வாரம் வீட்டை மீட்கும் வேலையில் ஆயுத்தமாக இறங்கிய பாக்கியா பண நெருக்கடியால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறாள். பாண்டிச்சேரி சமையல் ஆர்டர் மூலம் எட்டு லட்சம் ரூபாய் சம்பாதித்த பாக்கியாவுக்கு மீதம் பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதற்கு என்ன செய்ய போகிறோம் என்ற குழப்பத்தில் இருந்த பாக்கியாவுக்கு மருமகள்கள் இருவரும் சமாதானம் செய்கிறார்கள். "நீங்கள் அப்படி எந்த சவாலில் தோற்று போயிடமாட்டீங்க. கவலை படாதீங்க என சமாதானம் செய்கிறார்கள்". 



எழில் பட வேலையாக வெளியில் சென்றவன் வீடு திரும்பவில்லை. காலையில் தான் வீட்டுக்கு வந்த எழில் அம்மா கையில் ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கிறான். "நீ கஷ்டப்பட்டதை விட நான் ஒன்றும் பெரிதாக கஷ்டப்படவில்லை. நீயே எல்லா பணத்தையும் கொடுத்து வீட நீயே வைச்சுக்கலாம் என நினைச்சியா. விடமாட்டேன் பாக்கியலட்சுமி" என எழில் அம்மாவை கிண்டல் செய்கிறான். சந்தோஷத்தில் பாக்கியா செய்வதறியாது திகைத்து நிற்கிறாள். 


ஜென்னி, செழியனுக்கு போன் செய்து "பணம் ரெடி பண்ணிட்டியா?" என கேட்கிறாள். "முழுசா கொடுக்க முடியுமா என தெரியல, ஆனா இப்ப ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்துடலாம். மீதி லோன் போட்டு கொடுத்துடலாம்" என்கிறான் செழியன். ஜென்னி உடனே "இப்போ ஐந்து லட்சம் போதும். உடனே எடுத்துட்டு வா" என்கிறாள். வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அப்போது அங்கு வரும் செழியனிடம் இன்னும் ஐந்து லட்சம் தான் தேவைப்படுது அதுவும் இன்னும் இரண்டு நாளில் வந்துவிடும். அதையும் கொடுத்து விடலாம் என எழில் சொல்ல செழியன் என்னை மட்டும் எதிலும் சேர்த்துக் கொள்ளாதீர்கள் என சொல்லி செல்லமாக கோபித்து கொள்கிறான். நாளையோட ஒரு மாசம் முடியுது அதனால் ஒரு நாள் முன்னாடியே அவரோட பணத்தை கொடுத்து அனுப்பிவிடலாம் என சொல்லி அவன் கொண்டு வந்த ஐந்து லட்சம் ரூபாயையும் பாக்கியாவிடம் கொடுத்து விடுகிறான். சந்தோஷத்தில் பாக்கியா நான் ஜெயித்து விட்டேன். ஒட்டு மொத்த குடும்பமும் என்னுடன் இருக்கிறது இதை விட வேற எனக்கு என்ன வேண்டும் என மகிழ்ச்சி அடைகிறாள்.


 



பணத்தை சாமியிடம் வைத்து வாங்கிக்கொண்டு இருக்கும் போது மாடியில் இருந்து கோபியும் ராதிகாவும் பேசிக்கொண்டே இறங்கி வருகிறார்கள். பாக்கியாவை பார்த்து ராதிகா "என்ன உங்களாக பணம் ரெடி பண்ண முடியலன்னு சாமிகிட்ட போய் நிக்குறீங்களா?" என திமிராக கேட்கிறாள். கோபியும் சேர்ந்து கொண்டு "பணம் ரெடி பண்ண முடியல அதனால தான் அமைதியா நிக்கிற" என கிண்டலாக பேசுகிறார். பாக்கியா அதற்கு "முடியாமல் எல்லாம் அமைதியா நிக்கல. நீங்க பேசி முடிக்குற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்" என பாக்கியா மிகவும் கம்பீரமாக சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


நாளைய எபிசோடில் பதினெட்டு லட்சம் ரூபாயையும் கோபியிடம் கொடுத்து சவாலில் ஜெயித்து விடுகிறாள் பாக்கியா. பணத்தை பாக்கியாவால் ரெடி செய்ய முடியாது அதனால் அவள் சவாலில் தோற்று விடுவாள் என ஆவலுடன் அவளை அசிங்க படுத்த காத்திருந்த கோபிக்கும் ராதிகாவும் மூக்கு உடைந்தது. ராதிகா "வாங்க கோபி நாம இங்க இருந்து கிளம்பிடலாம்" என சொல்லி இருவரும் பெட்டி படுக்கையுடன் வீட்டை வீட்டு கிளம்புகிறார்கள். அவர்கள் வீடு வாசலை விட்டு தாண்டியதும் கடல மூடு டா என இழுத்து மூட சொல்கிறாள் பாக்கியா. இது தான் நாளைய எபிசோடில் நடக்க போகிறது. இந்த தருணத்திற்காக தான் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.