Seetha Raman: சீதாவால் மகாவுக்கு காத்திருக்கும் செக்...சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

Continues below advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

Continues below advertisement

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவுக்கு பரதம் சொல்லிக் கொடுக்க மாஸ்டர் குடி போதையுடன் வீட்டுக்கு வந்த நிலையில் மகா அவரை வெளியே போக சொல்ல மதுமிதா நீங்க ஒரு ஸ்டெப் போட்டு காமிங்க என்று சொல்ல மாஸ்டர் பயங்கரமாக பரதம் ஆடியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதைத்தொடர்ந்து மகாவுக்குள் பயம் ஏற்படுகிறது, மறுபக்கம் சீதா அவரை வீட்டுக்கு வெளியே கூட்டிச்சென்று பயிற்சி எடுக்க மாஸ்டர் இனி இது சீதாவுக்கான போட்டி கிடையாது, எனக்கும் மகாவுக்கும் இடையே நடக்கும் போட்டி என சொல்கிறார்.

மேலும் ராமையும் கூட சேர்ந்து டான்ஸ் ஆட சொல்ல அவன் எனக்கு டான்ஸ் சுத்தமா வராது என சொல்கிறான். சீதா அதெல்லாம் கத்துக்கலாம் எனக்காக என்ன வேணாலும் செய்வேன்னு சொன்னீங்கல, என்னோட டான்ஸ் ஆடுங்க என்று சொல்ல வேறு வழியில்லாமல் ராம் டான்ஸ் ஆட கற்றுக் கொள்கிறான்.

வீட்டுக்குள் மகா டென்ஷனாக உட்கார்ந்து இருக்க ஜெயா மாஸ்டர் என்னைவிட சென்னையில பெரிய பரதநாட்டியம் மாஸ்டர் யாரும் கிடையாது, எனக்கு வேணா அவங்க யாருன்னு தெரியாம இருக்கலாம் ஆனா அவங்களுக்கு என்னை நிச்சயமா தெரியும், என்னை பார்த்ததும் பயந்து ஓடிப் போயிடுவாங்க என்று சொல்லி சீதா அழைத்து வந்த மாஸ்டரை கூப்பிட அவர் திரும்பி பார்க்க ஜெயா மாஸ்டர் அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு ஜெயாவுக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்தது இவர்தான் என்பது தெரிய வர மகாவுக்கு இன்னும் அதிர்ச்சி அதிகமாகிறது. இருந்தாலும் ஜெயா மாஸ்டர் அவர் என்னதான் எனக்கு குருவாக இருந்தாலும் இந்த போட்டியில் நான் அவரை வெல்வேன் என சொல்கிறார். அதன் பிறகு ராம் முதல் முறையாக டான்ஸ் பிராக்டிஸ் செய்ததால் அவனுக்கு கால் வலி வந்துவிட சீதா அவனது காலை பிடித்து விட இருவருக்கும் இடையே நெருக்கம் உருவாகிறது. ஒருவருக்கொருவர் காதலை பகிர்ந்து கொள்கின்றனர்.

 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola