சின்னத்திரை நிகழ்ச்சிகள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்ட நிலையில் சின்னத்திரை நடிகர்களை மட்டும் விட்டு விடுவார்களா என்ன? சின்னத்திரை ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே சின்னத்திரை நடிகர்கள் பார்க்கப்படுகிறார்கள். அப்படி ரசிகர்களின் ஃபேவரட் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அமித் பார்கவ்.
சீரியல் முதல் சினிமா வரை :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களின் நாயகனாக நடித்த அமித் பார்கவ் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். என்னை அறிந்தால், மிருதன், லக்கி மேன், அரண்மனை 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி ஒரு சில கன்னடம் மற்றும் இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அழகான குடும்பம்:
சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த சமயத்திலேயே சிவரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமித் பார்கவ் அவ்வப்போது மனைவி மற்றும் மகளும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவிப்பார்.
மகளுடன் அமித் :
அந்த வகையில் தனது மகளுடன் சேர்ந்து சின்ன தம்பி படத்தில் இடம்பெற்ற 'போவோமா ஊர்கோலம்...' என்ற பாடலை பாடி வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களை குவித்து வரும் ரசிகர்கள் அமித் பார்கவ் மகளை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். மேலும் ஒரு சிலர் உங்களை நான் சீரியலில் மிகவும் மிஸ் சேர்கிறோம் விரைவில் சீரியலில் நடியுங்கள் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.