Seetha Raman Serial Today Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அஞ்சலி அன்பு மாலையும் கழுத்துமாக வந்து நிற்க, சீதா தான் கல்யாணத்தை பண்ணி வச்சதாக அர்ச்சனா பழி போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, அன்பு இந்தக் கல்யாணத்துக்கும் சீதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல, மகா அதை கேட்க மறுக்கிறார். “இனிமே சேதுபதிக்கு ஒரே ஒரு பையன் தான், அஞ்சலி சேதுவோட மகளும் கிடையாது, இனி அவளுக்கு இந்த வீட்டில் இடமும் கிடையாது” என சொல்கிறாள். அதோடு “சீதாவுக்கும் இந்த வீட்ல இடம் கிடையாது இதை பத்தி யாராவது பேசினால் அவங்களும் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டியது தான்” என்று மகா வீட்டுக்குள் சென்று கதவை சாற்றிக் கொள்கிறாள். 


பிறகு அன்பு அங்கிருந்து கிளம்ப, சீதா கொஞ்சம் பொறுமையா இருங்க என்று தடுத்து நிறுத்துகிறாள். “பாஸ் வந்துட்டு இருக்காரு அவர் வந்து மகா கிட்ட பேசுவாரு” என்று சொல்லி தடுத்து நிறுத்துகிறாள். 


வீட்டுக்கு வந்து ராம் மூணு பேரையும் அறைந்து “நீதானே கல்யாணத்தை பண்ணி வச்ச” என்று சீதாவை திட்ட, சீதா நடந்த விஷயங்களை சொல்ல, ராமுக்கு அவள் மீது எந்த தப்பும் இல்லை என தெரிய வருகிறது. உள்ளே மகா சத்தம் போட்டு அவளுக்கு வீசிங் ஏற்பட மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் தூக்கி வீசுகிறாள். 


உள்ளே வந்த ராம் “இந்தக் கல்யாணத்துல சீதா மேல எந்த தப்பும் கிடையாது” என்று சொல்ல, ”நீ உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணி பேசாத” என்று கோபப்படுகிறாள். அன்பு இனிமேலும் பொறுமையா இருக்க முடியாது என்று கிளம்ப, சீதா “இவ்வளவுதான் உங்க பொறுமையா? உங்கள காதலிச்ச பொண்ணுக்காக காத்திருக்க கூட மாட்டீங்களா?” என தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்லி தடுத்து நிறுத்துகிறாள். 


இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.