ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் மகாவிடம் வீட்டுக்கு வர முடியாது என அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மகா எவ்வளவு முயற்சி செய்தும் ராம் அவனது முடிவில் உறுதியாக இருக்கிறான். மேலும் ராம், “நா மட்டும் வந்தா போதுமா? சீதாவும் வரணுமா?” எனக் கேட்க, அர்ச்சனா “நீ மட்டும் வந்தால் போதும்” என சொல்ல, மகா “நீங்க ரெண்டு பேரும் வாங்க” என சொல்கிறாள்.
ஆனாலும் முடியாது என மறுத்து விட, மகா உங்க அப்பாவுக்கு ஏதாவது பொறுப்பு என சொல்ல, சீதா “அவர் ஜெயிலிலேயே பார்த்தவர், அவருக்கு ஒன்னும் ஆகாது” என பதிலடி கொடுக்கிறாள். வேறு வழியில்லாமல் மகா அங்கிருந்து கிளம்ப வெளியே வந்ததும் சீதாவிடம் இங்கிருந்து ராமை மட்டும் எப்படி கூட்டிட்டு போறேன்னு மட்டும் பாரு என சவால் விட, சீதா மனதுக்குள் “நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க” என நினைத்துக் கொள்கிறாள்.
வீட்டுக்கு வந்த மகா சீதா மீது பழி போட்டு ராம் வரவில்லை என்று சொல்ல, சேது வீட்டுக்குள் வர மறுக்க, என் மேல நம்பிக்கை இருந்தா வாங்க என சொல்லி வீட்டுக்குள் கூட்டிச் செல்கிறாள். இங்கே துணி தைக்க வந்த பெண் ராமை பார்த்து சைட் அடித்துக் கொண்டே இருக்க, சீதா கோபப்பட்டு அவளைத் திட்டி விடுகிறாள்.
ராம் இதுக்கெல்லாம் என்கிட்ட ஒரு வழி இருக்கு என சொல்லிக் கொண்டே இருக்க, சீதா என்ன என்று தெரியாமல் குழம்புகிறாள். பிறகு இரவு ஆனதும் இரண்டு பாயும் சேர்த்து ஒன்றாக போடுகிறான். இங்கே மகா ராமையும் சீதாவை ஏன் பிரிக்க திட்டம் போடுகிறாள்.
இரண்டு பாயையும் ஒன்றாக போட்டிருப்பதை பார்த்த சீதா, என்ன என்று கேட்க, ராம் ரொமான்டிக்காக பேசுகிறான். இப்படி அந்த நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.