ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா உண்மையை உடைத்து பல்பு வாங்கியது போல் கனவு கண்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது தீபாவுக்கு நல்லது செய்யக்கூடாது என நினைக்கும் ஐஸ்வர்யா, “இந்தப் பக்கம் வந்தேன், உங்கள பாத்துட்டு போகலாம்னு வந்தேன்” எனப் பொய் சொல்லி சமாளிக்க, கார்த்தி “நீங்க ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டுட்டீங்க என்ன?” என அதட்டிக் கேட்க, ஐஸ்வர்யா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என சமாளிக்கிறாள்.


அதன் பின்னர் ரூபஸ்ரீக்கு போன் செய்து “வேறொரு ஆள் பேசுவது போல ஏற்பாடு செய்யுங்க” என்று சொல்கிறாள். பிறகு கோகிலா தீபாவை அழைத்து கார்த்திக்கிடம் பல்லவி பேசுவது போல பேச சொல்ல, அவள் கார்த்திக் சாரிடம் பொய் சொல்ல முடியாது என்று கூற, “பால் மேல அடிச்சு சத்தியம் பண்ணி இருக்க” என்று மிரட்டுகின்றனர்.


அடுத்ததாக வீட்டில் ஐஸ்வர்யா அபிராமி இடம் “கார்த்திக் இன்னும் வரலை” எனப் போட்டுவிட, அபிராமி கார்த்திக்கு போன் செய்ய எப்ப வருவ எனக் கேட்க, சீக்கிரம் வந்து விடுவதாக சொல்கிறான்.


அடுத்ததாக ரூபஸ்ரீ கார்த்திக்கு போன் செய்து உங்களை நேரில் பார்க்கணும் என்று சொல்ல, அவனும் பார்க்கலாம் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.