விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் பாக்கியா “என்ன காரணத்திற்காக எங்களின் கேன்டீன் ஆர்டரை கேன்சல் செய்கிறீர்கள்” எனக் கேட்கிறாள். “உங்களுக்கு கேன்டீன் ஆர்டர் கொடுக்க எங்களுக்கு விருப்பமில்லை, அதனால் தான் கேன்சல் செய்கிறோம்”
என திரும்பத் திரும்ப அதையே சொல்கிறாள்.
“ஒரு முறை உங்களின் ஸ்டாஃப்ஸ் கிட்ட கேளுங்க, எங்க சமையலில் என்ன குறை இருந்ததது?” என பாக்கியா சொல்ல "எங்க ஸ்டாஃப்ஸ் மேல உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?" என ராதிகா கேட்க "இல்லை என்னோட சமையல் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை உள்ளது" என்கிறாள் பாக்கியா. அப்போ வோட்டிங் வைச்சுக்கலாம் என ராதிகா சொல்லிவிட்டு சென்று விடுகிறாள்.
அமிர்தாவுக்கு அவளின் அம்மா போன் செய்து பேசுகிறார். அப்போது எல்லாரையும் பற்றி விசாரித்துவிட்டு கணேஷின் அம்மா, அப்பா பற்றி விசாரிக்கிறார். "அவர்களுக்கு என்ன பிரச்சினை என தெரியவில்லை. கொஞ்ச நாளா தயங்கி தயங்கி தான் பேசுறாங்க. என்னவோ தப்பா இருக்குறது என மட்டும் தெரிகிறது. எழில் கிட்ட கூட சொன்னேன். அவர்களை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாம் என சொல்லியிருக்கிறார்" என்கிறாள் அமிர்தா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அமிர்தாவின் அம்மா "நீ ஒன்னும் இங்க எல்லாம் வர வேண்டாம். உன்னுடைய வீட்டில் தப்பா நினைப்பாங்க. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்" என சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார் அமிர்தாவின் அம்மா. “ஏன் அம்மா இப்படி பேசுறாங்க” எனக் குழப்பத்தில் இருக்கிறாள் அமிர்தா.
பழனிச்சாமி வீட்டுக்கு பாக்கியா வருகிறாள். அப்போது பாக்கியாவின் முகம் வாட்டமாக இருப்பதைப் பார்த்த பழனிச்சாமி "என்ன பிரச்சினை. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" எனக் கேட்கிறார். அப்போது பாக்கியா கேன்டீன் பிரச்சினை பற்றி சொல்கிறாள். வோட்டிங் வைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். “அது தான் என்னுடைய ஒரே நம்பிக்கை” என பாக்கியா சொல்கிறாள். “நீங்க நிச்சயமா ஜெயிப்பீங்க” என பழனிச்சாமி ஊக்கப்படுத்துகிறார்.
வீட்டில் உள்ள அனைவரிடமும் கேன்டீன் பிரச்சினை பற்றி சொல்கிறாள் பாக்கியா. அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கோடீஸ்வரன் சார் கிட்ட சொல்ல வேண்டியது தானே என கேட்கிறார் ராமமூர்த்தி. அவர் ஊரில் இல்லை என்றும் பொறுப்புகள் அனைத்தையும் ராதிகாவின் ஒப்படைத்து சென்றுள்ளது பற்றியும் சொல்கிறாள் பாக்கியா.
"இப்படி ஒரு மோசமான ஆளை நான் பார்த்ததே இல்லை. நீ கவலைப்படாத அம்மா என நம்பிக்கை கொடுக்கிறான்" எழில். இனியாவும் பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவுக்கு தெம்பு கொடுக்கிறார்கள்.
கணேஷ் வீட்டில் அவனின் அப்பா - அம்மா இருவரும் ரூமில் தூங்கிக்கொண்டு இருக்கும்போது கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வீட்டில் உள்ள எல்லா இடத்திலும் அமிர்தா பற்றி ஏதாவது தகவல் தெரிகிறதா எனத் தேடுகிறான் கணேஷ்.
அலமாரியில் எல்லாம் தேடுகிறான். அப்போது அலமாரி மேலே இருந்த பெட்டியை எடுத்து பார்க்கையில் அதில் அமிர்தாவின் போட்டோவை பார்க்கிறான். அமிர்தா அனைவரோடும் நன்றாக தான் இருந்து இருக்கிறாள். அப்போ என்னிடம் இருந்து அமிர்தாவைப் பற்றி எதையோ மறைக்கிறார்கள் எனக் கண்டுபிடித்து விடுகிறான். உள்ளே ஏதோ சத்தம் கேட்டு எழுந்த கணேஷின் அம்மா அப்பா கதவைத் தட்டுகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.