ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகாவும் அர்ச்சனாவும் சீதாவை பார்க்க ஜெயிலுக்கு வந்து காத்திருந்த நிலையில், வெளியில் வந்த சீதா மற்றும் மகா இருவரும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்கின்றனர். 




மகாலட்சுமி "எங்களை எதுக்கு வர சொன்ன?" என்று கேட்க, "சும்மா உங்களப் பாத்து கண்ணடிக்க தான்” என்று சீதா கண்ணடிக்க, மகா கடுப்பாகிறாள். திரும்பவும் எதுக்காக வர சொன்ன என்று கேட்க “உங்களைப் பார்க்கத்தான்” என்று சொல்வது மட்டுமின்றி, “நீங்க நான் ஜெயில்ல இருக்கறதை பார்த்து சந்தோஷப்பட தான் வந்தீங்க என்று தெரியும்” என சீதா சொல்கிறாள். 


மகாவும் “ஆமாம் அதுக்காக தான் வந்தேன்” என சந்தோஷமாக சொல்ல, அதற்கு சீதா, “இன்னும் நாலே நாள் தான்.. அப்றம் நான் வெளியே இருப்பேன், நீங்க உள்ள இருப்பீங்க” என்று அதிர்ச்சி கொடுக்க, மகாலட்சுமி “அப்படி என்ன பண்ண போற?” என்று கேட்கிறாள். “மேஜிக் பண்ணப் போறேன், நான் சொல்றது நிச்சயமா நடக்கும்” என்று சொல்லி சீதா வெறுப்பேற்ற, மகா கடுப்பாகி வீட்டுக்குக் கிளம்புகிறாள். 


வீட்டுக்கு வந்த மகா, சேது மற்றும் சுபாஷை அழைத்துப் பேச, அப்போது துரை மற்றும் மீரா இருவரும் அங்கு வருகின்றனர். மகா துரையிடம் “இந்த வீட்டோட கெஸ்ட் நீ, நாங்க பேசுவதெல்லாம் கேட்கக்கூடாது” என்று சொல்கிறாள்.




மீரா, “நான் இந்த வீட்டு ஆள் தானே, நான் இருக்கலாம் இல்ல” என்று கேட்க, “முதல்ல உன்ன தான் இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பனும்” என்று மகா கோபப்படுகிறாள். 


“சீதா ஏதாவது செய்வதற்கு முன்னாடி நாம் ஏதாவது செய்ய வேண்டும்” என போலீஸ் இன்ஸ்பெக்டரை வரவைத்து சந்தித்து பேசுகின்றனர். மறு பக்கம், துரை மற்றும் மீரா காத்துக் கொண்டிருக்க, சத்தியன் வீட்டுக்கு வர  அவனிடம் உதவி கேட்க, “நான் எதுக்கு இந்த விஷயங்களில் தலையிடனும் எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்கிறான். 


பிறகு அவன் “சீதாவைப் பார்க்க வேண்டும்” என துரையுடன் ஜெயிலுக்கு வர, அவன் அங்கும் “எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு” என்று கேட்க சீதா சம்பந்தம் இருக்கு என ஷாக் கொடுக்கிறாள்.  இப்படியான நிலையில் சீதா ராமன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.