விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நாளுக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல் டை ஹார்ட் ஃபேன்ஸ் பல நாட்களாக காத்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி என்ன சந்தோஷமான விஷயம் இன்னைக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடந்தது தெரியுமா?
வாய்க்கு வந்த படி பாக்கியாவை, ராதிகாவும் கோபியும் சேர்ந்து அசிங்கப்படுத்தி விட்டு எங்களுக்கு ஆபிஸுக்கு டைம் ஆகுது என கிளம்ப ஒரு 10 நிமிஷத்துல ஒன்னும் நடந்துட போறது இல்ல, வெயிட் பண்ணுங்க என சொல்லி வீட்ல இருக்குற எல்லாரையும் கூப்பிட்டு நடு ஹால்ல நிக்க வைக்குறாங்க பாக்கியா.
அப்போது அசட்டு கோபிக்கு ஆணவம் கொஞ்சம் கூட குறையாம, என்ன இன்னும் ஒரு மாசம் டைம் கேக்க போறியா? இல்ல எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டு வெளியே போக போறியா? என நக்கல் செய்கிறார் கோபி. எந்த நக்கல் பேச்சையும் சட்டை செய்யாத பாக்கியா உள்ளே போய் 18 லட்சம் ரூபாய் கொடு வந்து கோபியிடம் நீட்ட, கோபி - ராதிகா முகத்தில் ஈ ஆடவில்லை. அந்த மனுஷன் அப்பவும் அடங்கின பாடு இல்லை. என்ன பொம்மை நோட்டா அச்சு அடிச்சுட்டு வந்து நீட்டுறியா? போதும் சார் நிறுத்துங்க இது எல்லாம் வைட் மணிதான் பிளாக் மணி இல்லை. இத வாங்கிட்டு இரண்டு பேரும் எப்ப வெளிய போக போறீங்கன்னு சொல்லுங்க என்கிறாள் பாக்கியா.
இரண்டு பேரும் சேர்ந்து இந்த வீட்டில் என்னென்ன அட்டூழியங்கள் பண்ணீங்க. இனிமே இது என்னோட வீடு இது என்னோட குடும்பம், உங்களுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என பாக்யா சொல்ல கோபி அப்படி எல்லாம் வீட்டைவிட்டு போக முடியாது என சொல்கிறார். இதே இடத்துல நின்னுகிட்டு தானே சொன்னீங்க... பணம் கொடுத்தா போகணும் என்பதுதான் கமிட்மென்ட் என்கிறாள் பாக்கியா.
என்னோட அப்பா அம்மா குழந்தைகளை விட்டுட்டு போக முடியாது என கோபி சொல்ல ஏன் போலீஸ் இந்த வீட்டுக்கு வந்த பிரச்சனை பண்ண போதும் சரி,ராதிகா அம்மா வந்து அத்தையை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் போதும், நீங்க வாயை மூடிட்டு அமைதியா தானே இருந்தீங்க. இனியா மேல உயிரையே விடுறீங்க, ஆனா அந்த பொண்ணு ரூம்ல வந்து உட்கார்ந்துகிட்டு பிளஸ் டூ படிக்கிற பொண்ணுன்னு கூட பார்க்காம ரூம் இல்லாமல் அலைய விட்டீங்களே அப்போ எங்க போச்சு உங்க பாசம்? உங்க ட்ராமாவை இத்தோட நிறுத்திக்கோங்க என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள் பாக்கியா.
தாத்தா உடனே பணத்தையும் வாங்கிகிட்டு வீட்டை விட்டு போகமாட்டேனு வேற சொல்லுவியா? நீ இல்லனா தான் நாங்க சந்தோஷமா இருப்போம். இங்கேயே டேரா போடலாமுன்னு நினைச்சியா? வெட்கமா இல்லை என அசிங்கப்படுத்துகிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.