தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் தனது ஷேரை சீதா பெயருக்கு மாற்றி எழுதிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மீண்டும் அவமானப்பட்ட அர்ச்சனா கோபத்தில் உள்ளே சென்று விட, மகா “எல்லாத்துக்கு நீ தான் காரணம்” என சீதாவை திட்டி விட்டு செல்கிறாள். இதனால் சீதா ரூமுக்குள் வந்து கண்ணீர் விட்டு அழ ராம், துரை ஆகியோர் சீதாவை சமாதானம் செய்கின்றனர்.
ராம் “நான் இல்லாத போது இந்த வீட்டில் உன்னை எப்படியெல்லாம் கொடுமை படுத்தினாங்க என்று எனக்கு தெரியும், நீ ஏன் இப்படி மாறிட்ட? நீ பழையபடி தைரியமா இருக்கணும்” என பேசி தன்னம்பிக்கை கொடுக்க, சீதா “இனிமே இப்படி இருக்கா மாட்டேன்” என வாக்கு கொடுக்கிறாள்.
மறுபக்கம் அர்ச்சனா டீம் செம அப்செட்டில் இருக்க, அவளது தங்கச்சி கல்பனா “சோடா புட்டி போட்டு இருக்கவே அந்த சீதாவை சாதாரணமாக எடை போட்டுட்டேன், அவளை சும்மா விட மாட்டேன்” என்று சொல்லி கீழே வந்து சீதாவிடம் காபி கேட்கிறாள். திருப்பி திருப்பி ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சீதாவை வேலை வாங்கிக் கொண்டே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் சீதா காபியில் மிளாகாய் பொடியை கலந்து கொடுத்து பதிலடி கொடுக்கிறாள். இதனால் இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது.
இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Cool Suresh: பிக்பாஸ் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்! வெளியான அதிர்ச்சி வீடியோ!