ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவும் மீராவும் சாப்பாட்டில் விஷம் வைத்து மகாவை கொல்ல போவதாக ட்ராமா போட இதை மகா கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.
இதனையடுத்து இன்றைய எபிசோடில் மகா தூங்கி கொண்டிருக்கும் போது சீதா சொன்ன வார்த்தைகளால் பயத்தில் ஏதேதோ உளறிக் கொண்டிருக்க அந்த சமயம் அங்கு வரும் அர்ச்சனா மகாவை எழுப்புகிறாள். மகாவும் அர்ச்சனாவும் “இந்த சீதாவை எதாவது பண்ணியாகணும்” என்று யோசித்து சமையல்காரி செல்வியை கூப்பிடுகின்றனர்.
தூக்க கலகத்தில் வந்து நிற்கும் செல்வியிடம் “இனிமே நீ தான் சமைக்கணும், அந்த சீதாவையும் மீராவையும் கிட்சன் பக்கமே சேர்க்க கூடாது” என்று சொல்ல செல்வி ஒன்றும் புரியாமல் சரி என்று சொல்லி கிளம்பி விடுகிறார், அடுத்து ரூமில் ராமும் சீதாவும் தூங்காமல் இருக்க திடீரென சீதா எழுந்து ராமை பாஸ் பாஸ் என்று எழுப்ப ராம் என்னாச்சு’ என்று கேட்கிறான்.
உடனே சீதா “நாளைக்கு நான் தான் சமைக்க போறேன், உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்க, என்ன “நீ சமைக்க போறியா? சித்தி உன் மேல பயங்கர கோபத்தில் இருக்காங்க” என்று சொல்கிறான். ஆனால் சீதா “இல்ல, இனிமே நான் தான் சமைக்கணும்னு சித்தி செல்வி கிட்ட சொல்லி இருக்காங்க” என்று பொய் சொல்கிறாள், மேலும் “உங்களுக்கு புட்டு செய்து கொடுக்கவா?” என்று கேட்க ராம் ஓகே சொல்கிறான்.
மேலும் அவன் தூங்கலாமா என்று கேட்க, சீதா அதுக்குள்ள தூங்கணுமா? ஒரு பாட்டு பாடுங்க என்று சொல்லி ராமை வைத்து கேட்டு ரசிக்கிறாள், இதற்கிடையில் மதுமிதா பற்றியும் கேட்டு தெரிந்து கொள்கிறான் ராம். மறுநாள் காலையில் செல்வி சமைக்க, அங்கு வரும் சீதா “மகா என்ன தான் சமைக்க சொல்லி இருக்காங்க, நீ போ” என்று சொல்லி சமைக்கிறாள்.
பிறகு செல்வி அர்ச்சனாவுக்கும் மகாவுக்கும் சாப்பாடு பரிமாற, அவர்கள் சாப்பிட்டு விட்டு சாப்பாடு சூப்பர் என்று செல்வியை பாராட்ட, மீரா “இன்னைக்கு செல்வி சமைக்கவே இல்ல, சீதா தான் சமைச்சா” என்று சொல்ல சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்குமோ என்று பயந்து நடுங்குகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.