ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் பேக்குடன் வெளியே வந்து “சீதா இல்லாத இடத்துல எனக்கு என்ன வேலை?” என்று சொல்லி மகாவுக்கு ஷாக் கொடுத்தான்.


இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ராம் இப்படி சொன்னதைக் கேட்டு மகா அதிர்ச்சி அடைந்து நிற்க சீதா, மீரா, துரை என மூவரும் சந்தோசப்படுகின்றனர், சூப்பர் ராம் எனப் பாராட்ட சீதா, “பாஸ் எனக்கு கால் வலிக்குது உள்ளே போலாமா, வேணாமா கேளுங்க” என்று சொல்ல, மகா இன்னும் கடுப்பாகி உள்ளே சென்று விட இவர்கள் சந்தோசமாக வீட்டுக்குள் நுழைகின்றனர்.


அடுத்ததாக சீதா ராமுக்கு தொடர்ந்து நன்றி சொல்லிக் கொண்டே இருக்க, அவன் சீதா சொல்லும் தேங்க்ஸை எண்ணிக் கொண்டே இருக்கிறான், “போதும் சீதா தூங்கலாம்” என்று சொல்ல, அவள் “நீங்க பண்ணது பெரிய விஷயம் பாஸ், அதுக்காக உங்களுக்கு நைட் முழுக்க நன்றி சொன்னா கூட பத்தாது” என்று சொல்கிறாள்.


மறுபக்கம் ரூமுக்குள் மகா “சீதா என் கண்ட்ரோல்ல இல்ல, ராமும் கொஞ்சம் கொஞ்சமா அந்த சீதா பக்கம் போயிட்டே இருக்கான்” என்று பைத்தியம் போல புலம்ப, துரை இதைப் பார்த்து மெண்டல் ஆகிட்டா போல என்று நினைக்கிறார்.




மறுநாள் காலையில் மகா ஆபிஸ் கிளம்பிய நிலையில், சத்தியன் வீட்டுக்கு வர, சீதா மற்றும் ராம் ஆகியோர் அவனை வரவேற்று உபசரிக்கின்றனர். இங்கே ஆபிசில் மகா லாயர் ஒருவரை வரவைத்து மேஜை முழுக்க பணத்தைக் கொட்டி நிரப்பி “உடனடியா சேதுவையும் சுபாசையும் வெளியே எடுக்க வேண்டும்” என்று சொல்கிறாள், லாயர் கண்டிப்பா எடுத்துடலாம் என்று சொல்ல துரை இதைப் பார்த்து ஷாக் ஆகிறார்.


வீட்டில் சீதா தனது கையால் சமைத்து சத்யனை உபசரிக்க, இதையெல்லாம் பார்த்து கடுப்பாகும் அர்ச்சனா மகாவுக்கு போன் செய்து சொல்ல, அவள் நான் கிளம்பி வரேன் என்று சொல்லி வீட்டுக்கு கிளம்புகிறாள். அடுத்து சீதா “உங்க கல்யாணத்துக்கு நானே துணி தைத்து தரேன்” என்று இருவருக்கும் அளவெடுக்க, அங்கு வரும் அர்ச்சனா “நடக்காத கல்யாணத்துக்கு இதெல்லாம் தேவையா?” என்று நக்கல் அடிக்கிறாள்.


இதனால் அர்ச்சனா மற்றும் சீதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட, சீதா அர்ச்சனாவின் கழுத்தில் கத்தரி கோலை வைத்து மரண பயத்தை காட்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.