Seetha Raman: அன்புவின் தங்கையுடன் ராமுக்கு கல்யாணம்: புது பிளான் போட்டு களத்தில் இறங்கும் மகா.. சீதா ராமன் அப்டேட்!

Seetha Raman Today Episode Written Update April 24: சேது அன்புவைக் கூப்பிட்டு “அமெரிக்கா போக வேண்டாம் நாங்களே நல்ல சம்பளத்தில் வேலை போட்டுத் தரோம்” என்று சொல்கிறான்

Continues below advertisement

Seetha Raman Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகா அன்புவையும் அஞ்சலியையும் பிரிப்பேன் என்று சபதம் எடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது, அஞ்சலிக்கும் அன்புக்கும் இன்னைக்கே முதலிரவு நடத்த வேண்டும் என்று சீதா, செவப்பி ஆகியோர் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகிறாள் மகா. அடுத்து அன்புவின் தங்கைக்கு விக்கல் வர அவள் கையில் மருதாணி வைத்திருப்பதால் தண்ணீரை கேட்டு இங்கும் அங்கும் அலைகிறாள். 

கார்டனில் ராம் எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருக்க அங்கு வரும் அன்புவின் தங்கை குடிக்க தண்ணீர் கேட்க ராம் நீங்களே எடுத்து குடிங்க என்று சொல்ல,  கையில் மருதாணி போட்டு இருக்கேன், நீங்க கொஞ்சம் குடிக்க வைங்க” என்று சொல்ல வேறு வழியின்றி ராம் தண்ணீர் குடிக்க வைக்கிறான், இதைப் பார்த்த அர்ச்சனா கோபமாக மகா “அவளைத் தடுக்காதே. அவளை தான் ராமுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறேன். அவ தான் நமக்கு சரியா இருப்பா” என்று சொல்கிறாள். 

அதன் பிறகு மகா சேதுவிடம் “அன்புவை அமெரிக்கா போக வேண்டாம்னு சொல்லுங்க, நம்மால் அஞ்சலியை பிரிந்து இருக்க முடியாது” என்று பேச, சேது அன்புவைக் கூப்பிட்டு “அமெரிக்கா போக வேண்டாம் நாங்களே நல்ல சம்பளத்தில் வேலை போட்டுத் தரோம்” என்று சொல்ல அன்பு எனக்கு என் கரியர் முக்கியம் என்று சொல்கிறான். 

இதனால் சுபாஷ் அண்ணன் “இவ்வளவு சொல்றாரு, நீ முடியாதுனு சொல்ற” என்று கோபப்பட அன்பு சுபாஷை பிடித்து திட்டி விடுகிறான், இதையெல்லாம் பார்த்த சீதா ”மகா எதோ பிளான் பண்றாங்க” என்பதைப் புரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Continues below advertisement