விஜய் டிவியின் ஆல் டைம் ஃபேவரட் ரியாலிட்டி ஷோக்களில் மிக முக்கியமான ஒரு ஷோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த நான்கு சீசன்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி, தற்போது தனது அடுத்த சீசனுடன் தயாராக காத்திருக்கிறது. 


இதுவரையில் இல்லாத அளவுக்கு குக்கு வித் கோமாளி 5வது சீசன் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம்  நடுவராக கடந்த நான்கு சீசன்களாக மிகவும் கலகலப்பாக கலக்கிய செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக என்ட்ரி கொடுப்பது தான் இந்த பரபரப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது. 


 




குக்கு வித் கோமாளி சீசன் 5 வரும் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றின தகவல்கள் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வந்த நிலையில் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. 


 


 



அந்த வகையில் நேற்று குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளிகளாக என்ட்ரி கொடுப்பவர்களை அறிவிக்கும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியானது. அனைவருக்கும் பழக்கமான பிரபலங்களான சுனிதா, சரத், குரேஷி, புகழ், ராமர், அன்ஷிதா, கேமி, ஷப்னம்,வினோத்  உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து குக் குறித்த அப்டேட்டுக்காக சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக போட்டியில் கலந்து கொள்ளும் குக் குறித்த ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. 


அந்த வகையில் இந்த சீசனில் பிரபலமான யூடியூபர் இர்ஃபான், பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் வசந்த் வாசி, நடிகை சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, ஸ்ரீகாந்த் தேவா, நடிகை ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், திவ்யா துரைசாமி,  உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். வார இறுதி நாட்களை குதூகலமாக்க விரைந்து வருகிறது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி.